என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bjp meeting"
- பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை (27-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
- முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19ம் தேதியே வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை (27-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
நாளை காலை 9.30 மணிக்கு அமிஞ்சிகரை அய்யாவு மஹாலில் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், பாராளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் முக்கிய கூட்டம் என்பதால் எல்லோரும் கட்டாயம் கலந்து கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதால் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.
- கடந்த மாதம் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
- பாத யாத்திரை செல்லும் வழித்தடங்கள், அந்த பகுதிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.
ராமேசுவரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 4-ந்தேதி (செவ்வாய்) கமலாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
பாத யாத்திரை செல்லும் வழித்தடங்கள், அந்த பகுதிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. நடத்தப்பட்ட நிகழ்ச்சி பற்றிய விவர அறிக்கையும் பெறப்படுகிறது.
மாவட்டங்களில் கட்சி வளர்ப்பு, பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ள விபரங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக நிர்வாகிகள் கூறினார்கள்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்ட தலைவர்கள் செயல்பாடு சரியில்லை என்று தலைமைக்கு புகார் வந்து இருப்பதாகவும் அவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பது பற்றியும் ஆலோசித்து வரும் நிலையில் நடைபெற போகும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது.
- அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும்.
மதுரை:
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அப்போது கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை நீதிபதி விமர்சித்தார். நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:-
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. அதே எதிர்க்கட்சி சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது, இதே வேலையை தான் செய்கிறது.
கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது, இதை அனுமதிக்க முடியாது.
அதேசமயம் தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும். அது பொதுக்கூட்டமாகவோ, வேறு எதாவது வகையில் இருக்கலாம். கருத்துக்களை முடக்கக்கூடாது. அதுபோன்ற முயற்சிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
- விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:
கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு செய்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் திருவள்ளுவர் அரங்கில் பொதுக்கூட்டங்களுக்கோ வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை, விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதிபதி, மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
- அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது.
- அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஓசூர்:
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூர் ராம்நகரில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இதையடுத்து அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அவரை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
- பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகில் மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.
- பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆகிய முக்கியமான இரண்டு ஆறுகள் கடந்து செல்கின்றன. ஆனால் தருமபுரியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனை தவிர்க்க காவிரியில் இருந்து வெளியேறி வீணாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி சேமித்து பயன்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தருமபுரியில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பென்னாகரம் மெயின் ரோடு மேம்பாலம் அருகில் மாலை நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
மேலும் தருமபுரி மாவட்ட எல்லை தொடங்கி நகரம் முழுவதும் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சியினர் வரவேற்பு பதாகைகள், தோரணங்கள் கட்டியுள்ளனர்.
அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.
- கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கபப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தயாசங்கர், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ராம்ராஜ் பாண்டியன், அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, மகளிரணி துணைத்தலைவர் சந்தானலட்சுமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும், நெல்லை- பாபநாசம் சாலைப்பணியை துரிதமாக முடித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க நெடுஞ்சாலைதுறையில் மனு கொடுக்க வேண்டும்.
மாவட்ட தலைவர் தலைமையில் சொத்துவரி அதிகரிப்பு, மின்கட்டணம் உயர்வு ஆகியவற்றை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும், வீரவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடத்தை மகளிருக்கு தனியாக பள்ளி செயல்படுத்தி அதிகாரிகளை கேட்டு கொள்வது,
பூமிநாதசாமி கோவில் ரதவீதியை தேர் ஓடும் அளவுக்கும் அகலபடுத்திடவும், கல்லிடைக்குறிச்சி குலசேகரபெருமாள் கோவிலை புணரமைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு, கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் மனு செய்து ஆவண செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கல்லிடைக்குறிச்சி நகர தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் ஆதிநாராயணன், முத்துராமன், வீரவநல்லூர் நகர தலைவர் சங்கரலிங்கம், விவசாய அணி ஒன்றிய தலைவர் பண்டாரம், ஒன்றிய துைணத்தலைவர் ராஜகோபாலன், சபரிநாத், அரசாங்க பிரிவு மாவட்ட செயலாளர் முருகேஷ்வரன், அரசாங்க பிரிவு அம்பை நகர தலைவர் ராமர்பாண்டியன், சேரை ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் மகாராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர்கள் அருணாசலம், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.
பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதால் மாவட்ட தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வண்ணம் சிறிது தூரம் ஊர்வலம் சென்றனர்.
- பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
- குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது என கேட்டுக் கொள்ளப்பட்டது.
நெல்லை:
பா.ஜனதா கட்சியின் மேலப்பாளையம் நகர் கிழக்கு மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
மண்டல தலைவர் பெரியதுரை தலைமை தாங்கினார்.மண்டல பொதுச்செயலாளர் பாலகுரு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், ராதாபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிர்வாகிகள் கோபால்,அருள் முகேஷ், சுப்பிரமணி சண்முகம் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் 31-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, 43-வது வார்டு பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்குவதையும், குடியிருப்பு பகுதிகளில் நுழைவதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வலியுறுத்துவது, 51-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்த வேண்டும்.
40-வது வார்டு பகுதியில் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும். 41- வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். 42- வது வார்டு தாமஸ் தெரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கள் வெற்றிவேல், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலு வரவேற்புரை யாற்றினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாதார பிரிவின் தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.
இதில் பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்துவது எனவும், மாவட்டத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடை செய்யக் கோரியும், கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க கோரியும், மல்லாபுரம் -ராஜதானி தார் சாலையை விரிவுபடுத்தி பஸ் போக்குவரத்தை தொடங்க கோரியும், தேனி - உப்பார்பட்டியில் அரசு சிப்காட் தொழில் நிறுவனம் அமைத்திட தேவையான பணிகளை துரிதமாக செயல்படுத்துவது எனவும்,
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றக்கோரியும், நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் தற்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
பிரதமர் மோடி வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் திருப்பூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திருப்பூரில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்கிறார்.
பின்னர் 3.15 மணி அளவில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மதியம் 3.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அருகில் அமைக்கப்பட்டு உள்ள பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு 3.30 மணியளவில் செல்கிறார்.
அங்கு பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். இதில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 4.55 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகம் செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை- திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மேற்கு மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவை - திருப்பூரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து ஒத்திகையும் நடைபெற்றது.
பிரதமர் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூர் வந்துள்ளனர்.
அவர்கள் விழா மேடை, ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் இன்று திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று மாலை திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
பிரதமர் மோடி பேச உள்ள பொதுக்கூட்ட மேடை தேசிய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேடைக்கு வெளியே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
கேரளாவில் எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆனாலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பாரதீய ஜனதா கட்சிக்கும் தான் கேரளாவில் தொடர் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி தற்போது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் இதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி மாநில அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் மாநில அரசுடன் மோதல் போக்கை பாரதீய ஜனதா கடைபிடித்து வரும் சூழ்நிலையில் ஒரே நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 4 வழிச்சாலையை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக 15-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் அன்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைகிறார்.
பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.20 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறார். அங்கு நடைபெறும் விழாவில் 4 வழிச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் கேரளா வருகை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மந்திரி மேழ்சிகுட்டி அம்மா உறுதி செய்துள்ளார். #PinarayiVijayan #pmmodi #bjp
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்