என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "BJP state president"
- தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
வரும் 2025ம் ஆண்டு பயிர் பருவத்தில் கொப்பரை ஆதார விலையை உயர்த்தி வழங்கிய பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக
மற்றும் தமிழக தென்னை விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டில் 25.7% தென்னை உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கியிருப்பது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
- தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.
மறுநாள் 17-ந் தேதி அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
இந்த பேரணியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பா.ஜக. நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது, தங்களது கைகளில் பதாகைகள் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியடி சென்றனர்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.
பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை உள்பட 917 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசாைர கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செலயாளர் ஆறுச்சாமி, மண்டல செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலளார் ஜெய்சங்கர்,, பிரபாகரன், செல்வராஜ், சசிக்குமார் உள்பட மீது தடையைமீறி போராட்டத்தில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மதுரையில் இன்று மாலை 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கபடி போட்டி நடக்கிறது.
- இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.
மதுரை
மதுரை மாவட்ட பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் 60 மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இறுதி கபடி போட்டி மதுரா கல்லூரியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் 720 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
இந்த போட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், சீனிவாசன், கதலி நரசிங்க பெருமாள், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, பா.ஜ.க. திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, துணைத்தலைவர்கள் அக்னி எம்.ராஜேஷ், பாலாஜி தங்கவேல், சிறப்பு விருந்தினர்கள் ரமணன் விஜயன், ஆதம் சிம்சியர், மாநில செயலாளர்கள் என்.ராமச்சந்திரன், டாக்டர் சுரேஷ்குமார், டி.புஷ்பநாதன், எம்.கண்ணன், ஞானமணி, தமிழ்சங்கு,டாக்டர். பப்னா ராஜ்குமார், கார்த்திக், காளிராஜ்,ஹரிகிருஷ்ணன், ரவிக்குமார், ஆயிஷா அப்துல்லா, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் என்.ராமச்சந்திரன் செய்திருந்தார்.
- நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?
- சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி வருகிறது.
தமிழகத்தில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தி உள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805131909141113_1_Somu-Veerraju-Exposes-CBN-Completely-1519387021-1897._L_styvpf.jpg)