என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bleaching Powder"
- வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
- மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை முழுக்க வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற பகுதிகளை போன்றே இங்கும் தூய்மை பணிகளுக்கு பிறகு, இறுதியாக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மைதா மாவு மூட்டையின் கவர்கள் இடம்பெற்று இருப்பதை பார்த்து அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி தூய்மை பணிகளின் அங்கமாக ப்ளீச்சிங் பவுடர் தூவுவதற்கு மாற்றாக சாலையோரம் மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், மைதா மாவு பையில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் தூவியதாக தெரிவித்துள்ளார்.
- மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
- மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா உத்தர வின் பேரில் ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதி காரிகள் பல்வேறு முன் னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் தேவனாம் பட்டினம் சின்னத்தம்பி செட்டி தெருவில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்றார். பின்னர் வீடு வீடாக நேரில் சென்று மொட்டை மாடி போன்ற இடங்களை டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் நாள்பட்ட தண்ணீர், மழை நீர் உள்ளதா? வீடுகள் சுகாதாரமாக உள்ளதா? மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் உள்ளதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
அப்போது ஒரு வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் நாள்பட்ட நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் என்பதால் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
- முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தருமபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்