search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blessing"

    14CNI0260602024: தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.

    இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.


    அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.

    பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

    இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.

    பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர்.
    • இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பிரியாணி கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென்று கடைக்குள் சென்று அன்பளிப்பாக பணம் கேட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த திருநங்கைகள் கடை நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டனர். இதையடுத்து கடை உரிமையாளர் வெளியில் வந்து தேவையற்ற முறையில் கூச்சலிட வேண்டாமென திருநங்கைகளிடம் கூறினார்.இருந்தபோதிலும் திருநங்கைகள் கடைக்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர் தகவலறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    ஏன் கடை முன்பு நிற்கிறீர்கள்? அனைவரும் கலைந்து செல்லுங்கள் திருநங்கைகளிடம் போலீசார் கூறினர். அப்போது திடீரென்று திருநங்கைகள் புதிதாக கடை திறந்து உள்ளதால் எங்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கினால் ஆசீர்வாதம் செய்வோம். இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் தற்போது யாரும் நிற்க வேண்டாம். முதலில் கலைந்து சொல்லுங்கள் என தெரிவித்தனர். திடீரென்று திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருநங்கைகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய வடுக பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிப்பு.
    • 96 வகையான ஹோமம், 9 வகையான நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு மகா யாகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த பனங்காடி ஊராட்சி வடுவகுடியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய ஶ்ரீ வடுக பைரவர் தனி சன்னதியில் அமைத்து அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

    பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரூத்ர யாகம் மற்றும் அஷ்டமி மகா யாகம் நடையைபெற்றது.

    முன்னதாக பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோமம் திரவியங்கள், 9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் பெண் சாமியாரிடம் ஆசி வாங்கிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DelhiPolice
    புதுடெல்லி:

    டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் இந்திரபால் சிங். உத்தம் நகர் பகுதியில் பெண் சாமியார் நமிதா ஆச்சாரியா என்பவரிடம் இவர் ஆசி வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. போலீஸ் சீருடையுடன் அவர் தோன்றியதால் பல்வேறு எதிர் விமர்சனங்களும் எழுந்தன.

    இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #DelhiPolice
    ×