search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "block the road"

    • மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    ஊட்டி,

    குன்னூா் அருகே இந்திரா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு போதிய கழிப்பறை வசதி கள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திரா நகரில் நடைபாதை வசதி இல்லை. தடுப்புச் சுவா் கட்டப்படவில்லை. எனவே பொது மக்கள் ஆபத்தான நிலை யில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில், காா்த்திக்,சிவா ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்கு வரத்த பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். எனவே இருத ரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்திருந்த வட்டாட்சியா் கனி சுந்தரம், நகராட்சி ஆணையா் ஏகராஜ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். பின்னர் இந்திரா நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை, 3 மாதங்களில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்
    • குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித் திருப்பூர் அடுத்த மொசக்கவுண்டனூர் பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடி நீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொது மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொது மக்கள் இன்று காலை வெள்ளித்திருப்பூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத் ததும் அந்தியூர் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுசு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் 100-க்கும் றே்பட்டவர்கள் குடும்ப த்துடன் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் கடும் அவதி வருகிறோம். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் போலீசார் கேட்டனர். அப்போது அம்மாபேட்டை- மொசக்கவுண்டனூர் செல்லும் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் வேலை நடந்து வருவதால் அந்த பகுதியில் குடிநீர் செல்லும் குழாயில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இது விரைவில் சரிசெய்யப்ப டும் என்றனர்.

    இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் இந்த பகுதிக்கு குடிநீர் கிடைக்க உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பன்றிகள் வருவதை அறிந்து புதரில் மறைந்து கொண்டார்.
    • ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது புதுப்பாளை யம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென அங்கு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது.கூட்டமாக பன்றிகள் வருவதை அறிந்த செல்வி புதரில் மறைந்து கொண்டார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை காட்டு பன்றிகள் துரத்தி துரத்தி தாக்கியது.

    இதில் ஒரு ஆட்டுகுட்டி காட்டு பன்றிகள் தாக்கியதில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒருங்கிணை ந்து காட்டுப ன்றிகளை கட்டுபடுத்த தவறிய வனத்துறை கண்டித்து கோவை சத்தி நெடுஞ்சாலையில் பசூர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழக விவசாயிகள் சங்க த்தின் சார்பில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் உயிரிழந்த ஆட்டு குட்டியை எடுத்து வந்து காட்டு பன்றிகளினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை அதனை தடுக்க வேண்டிய வனத்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இனிமேல் இதுமாதிரியான சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×