என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Boat Capsize"
- ஏரியில் தத்தளித்த படகில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
- மேலும் சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.
கோமா:
ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் மினோவில் இருந்து வடக்கு கிவு மாகாணத்தின் கோமா பகுதியை இணைக்கும் ஏரியில் நேற்று படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 278 பயணிகள் இருந்தனர்.
ஏரியை ஒட்டி அமைந்துள்ள கிடுகு துறைமுகம் அருகே சென்றபோது அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் பயணித்த பலர் ஏரி நீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர்.
தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த ஏரியில் மீட்புப் பணி தொடர்கிறது.
இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என உள்ளூர் கவர்னர் தெரிவித்தார்.
படகு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- மாணவர்கள் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
- விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது.
- படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமி, 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர், குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது. நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வது, மோசமான பராமரிப்பு மற்றும் மழைக்காலத்தில் அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளம் போன்ற காரணங்களால் படகு கவிழும் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமி, 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் படகில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
- 30 பேர் வரை நீரில் மூழ்கி உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்து விபத்தில் சிக்கியது. இந்தக் கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
படகு கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
- அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மீட்டனர்.
திடீரென ஏற்பட்ட விபத்தால் 11 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் 10 பேர் மாயமாகினர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
- ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
- குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேமாஜி மாவட்டத்தின் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
- அதிக பாரம் காரணமாக படகு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
- காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவுலியார் காட் பகுதியில் இந்த கோர விபத்து நடந்தது.
மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பஞ்சகர் மாவட்ட துணை நிர்வாகத் தலைவர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #AndhraPradesh #EastGodavri
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்