என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bomman"
- 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றது.
- இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.
இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற பெண் இயக்குனர் 2 குட்டி யானைகளை வளர்த்த விதம் உள்ளிட்ட அனைத்தையும் 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார். இந்த படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்ததன் காரணமாக படக்குழுவினர் இதனை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினர். அங்கு இந்த ஆவணப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டு சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதினை பெற்றது.
இதனையடுத்து பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளி உலக அளவில் புகழ்பெற்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாகன் தம்பதியை சென்னைக்கு அழைத்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார்.
இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் படம் முடிந்ததும், தங்களுக்கு வீடு, நிலம், பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக பாகன் தம்பதி புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாகன் தம்பதியினர் கூறியதாவது:-
இரவு, பகல் பாராமல் வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் கூறியபடி நாங்கள் நடித்து கொடுத்தோம். வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காடு, மேடு என அலைந்து அவர்கள் கூறியபடி அனைத்தையும் செய்தோம்.
ஆவணப்படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே கடைசிவரை தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால் நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன் என்கிறார். அதனை நம்பி நாங்களும் எங்களது வங்கி கணக்கில் சென்று பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. பணம் போட்டுவிட்டதாக கூறி ஏமாற்றுகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்து கொள்வார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் என்பவர் பொம்மன்-பெள்ளி தம்பதியை அழைத்து சென்று, அவர்களின் பிரச்சினை குறித்து முகமது மன்சூர் என்ற வக்கீலிடம் பேசினார். இதனை தொடர்ந்து 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் முகமது மன்சூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரவீன்ராஜ் கூறியதாவது:-
இந்த ஆவணப்படம் எடுக்க பொம்மன்-பெள்ளி தம்பதி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவில் வீடு, பணம், பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை, பூனை என எல்லோருக்கும் சொந்தமானது தான். அந்த ஆஸ்கர் விருதை 2 நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கலாமே.
அப்படி என்ன தீண்டத்தகாதவர்களா அவர்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலமாக தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆவணப்படத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பொம்மன்-பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அதனை செய்யவில்லை. வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இப்போது தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை.
இதையடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் முகவரிக்கும், மெயிலுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதேபோல் ஆஸ்கர் விருது குழுவுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது.
- பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற பள்ளிக்கு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
அவர்களுடன் மாணவ-மாணவிகள் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிய பொம்மன், பெள்ளி தம்பதியினர், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
சாதாரண யானைகள் காப்பகமாக இருந்த தெப்பக்காடு முகாம் தற்போது சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பிரதமர், ஜனாதிபதி உள்பட பலர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து யானைகளை பார்வையிட்டு சென்றனர். தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டனான எம்.எஸ்.டோனி விரைவில் முகாமுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை பழங்குடியின மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.
- பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.
ஊட்டி:
7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கான இலச்சினையாக (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ள யானை உருவத்தின் ஆடையில் ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த யானை பாகன் பொம்மனின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இந்த போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக, இதில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவர்கள், இளைஞர்கள் அந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அதன்படி, நேற்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோப்பை அறிமுக விழா ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு சார்பில் நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், ஆஸ்கா் விருது பெற்ற 'தி எலிபண்ட் விஸ்பெரா்ஸ்' குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். தொடர்ந்து பொம்மனிடம் ஆசிய போட்டியில் இடம் பெற உள்ள மாதிரி ஜெர்சி மற்றும் ஹாக்கி ஸ்டிக் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் பொம்மன், பெள்ளி தம்பதி ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர். மேலும் அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சா் ராமசந்திரன் பேசுகையில், இந்தியாவில் விளையாட்டுத் துறையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டுத் துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.
முன்னதாக ஹாக்கி நீல்கிரிஸ் சார்பில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து, மாணவர்கள் மற்றும் ஹாக்கி வீரர்கள் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.
இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் நகர மன்ற துணைத் தலைவரும், தி.மு.க. விளையாட்டுத்துறை அணியின் மாநில துணை செயலாளருமான வாசிம்ராஜா, தாசில்தார் கனி சுந்தரம், ஹாக்கி நீலகிரிஸ் தலைவர் ஆனந்த் கிருஷ்ணன், துணைத் தலைவா் சுரேஷ்குமாா், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ராஜா மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான் ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண படம் எடுக்கப்பட்டது.
- ஆஸ்கர் வென்ற தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
சென்னை:
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது. இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.
கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை ஒப்படைத்தது.
இந்த குட்டி யானைகளை தங்களது பிள்ளைகள் போல வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான் ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவண படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் வென்ற தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ் மற்றும் அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனியை சந்தித்தனர். அவர்களுக்கு டோனி அவர்களது பெயர் பதித்த சிஎஸ்கே ஜெர்சியை பரிசளித்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
- இந்த ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்து, பாகன் தம்பதியினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானை களையும் பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.
பிரதமர் வருகைக்கு பிறகு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு யானைகளுடன் புகைப்ப டம் எடுக்கின்றனர். மேலும் பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியையும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு ஆவணப்படத்தின் இயக்குனரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் வந்தார். அவர் முகாமில் ரகு, பொம்மி யானைகளுடனும், பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தில் குட்டி யானைகளுக்கு நடுவே கார்த்திகி கோன்சால்வ்ஸ், பாகன் தம்பதி நிற்கின்றனர். மேலும் குட்டி யானைகள் தங்களின் துதிக்கையால் ஆஸ்கர் விருதினை தூக்கி பிடித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபடி நிற்கின்றன.
இந்த காட்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்