search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakage"

    • 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் கொட்டகையில் இருந்த 3 டிராக்டர்கள் கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல் வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், கரைபாளையம் பகுதியில் பூங்கோதை என்பவரது வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பட்டதாரி பெண் நித்யா என்பவர் கொலை சம்பந்தமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நித்யாவின் உறவினரான விவசாயி குழந்தைவேல் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டம், கரைப்பாளையம் பிரிவு சாலை அருகே உள்ளது. நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தனர். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாயையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    இதனிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தோட்டத்துக்குள் தீ எரிவதை பார்த்து, அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வந்து, அங்கு எரிந்து நாசமான பவர் டில்லர் டிராக்டரையும், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுபோன்று தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட உறவினர் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தும் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொலை செய்து இறந்து போன நித்தியாவின் உறவினர்கள் அவர்கள் சார்ந்த ஜாதி சங்கத் தலைவர்கள் உட்பட பலரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டமங்கலம்- புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப்லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் வருகிற குடிநீர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள மெயின் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப் லைனில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது குடிநீர் வீணாகி வருகிறது.

    அதிக அழுத்தத்துடன் குழாயின் பக்கவாட்டில் இரண்டு இடங்களில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரானது அருகில் உள்ள வாய்காலில் கலந்து பயனற்று போவதாகவும் கிராம குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.
    • குடிநீர் குழாய் உடைப்பால் பொதுமக்கள் பாதிப்பு.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து மின் மோட்டார் வைத்து அங்கிருந்து இந்தப் பாலத்தின்மேல் ஓரமாக குடிநீர் குழாய் அமைத்து பரமத்திவேலூர் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.

    குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி பாலத்தின் மீது பீச்சி அடித்து வருகிறது.

    இதனால் பாலத்தின் ஓரத்தில் நெடுகிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்கள் தண்ணீரில் பட்டு நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.

    எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி குடி நீர் வெளியேறாமல் தடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.
    • தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மலைராஜ். ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆட்டோவில் அமர்ந்து பேசி உள்ளனர். இதனை அவர் கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது ஆட்டோ கண்ணாடி உடைக்க ப்பட்டிருந்தது. இதுகுறித்து மலைராஜின் தந்தை போஸ் ஆட்டோவில் அமர்ந்திருந்த 3 பேரின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த 3 பேரும் போஸ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி உள்ளனர்.

    இதனை தடுக்க முயன்ற போஸின் மற்றொரு மகன் குமாரையும் அடித்து தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிஷோர் டேனியல் என்பவரை கைது செய்தனர். மேலும் காளிராஜ், சங்கர் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×