search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brides"

    • அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.
    • மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பொதுவாகவே திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும், ஜானவாச காரிலும், மணமக்களை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், இங்கு மணமக்கள் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை பற்றி இங்கு காண்போம்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- பழனியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேசுக்கும், நடுவிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாதகுமார்- விஜயராணி தம்பதியின் மகள் நாகஜோதிக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் நேற்று ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    மணமகனான வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தையொட்டி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் தான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.

    அதற்காக, விவசாய குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தனது திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என வெங்கடேஷ் அவரது நண்பர்களிடம் கூறினார்.

    அதன்படி, அவரது நண்பர்கள் வெங்கடேஷின் திருமணத்தில் மாடுகளை வைத்து வெகு விமர்சையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

    அதன்படி, திருமணம் முடிந்ததும் ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா மாட்டு வண்டியில் மணமக்கள் இருவரும் ஏறினர். பின்னர், மணக்கோலத்தில் மணமகன் மாட்டுவண்டியை ஓட்ட அருகில் மணப்பெண் புண்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

    தொடர்ந்து, மாட்டு வண்டியானது சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பேராவூரணி அண்ணாசிலை அருகில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தது. வரும் வழி எல்லாம் அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    • வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.
    • மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் தனது திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் காயாமொழியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார். மேலும் மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாகவும் கூறிய மணமகன் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.

    • உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
    • பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலக்காடு :

    திருமண பந்தம் என்பது...

    மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்...

    இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது...

    ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம். அம்மி மிதிப்பது என்பது ஒரு சடங்கு. மணமகன் என்பவர், மணமகளின் வலக்கால் கட்டை விரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து, இந்த கல்லைப்போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதே இதற்கான ஐதீகம்.

    சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாக திகழ்கின்றனர் என்பது ஐதீகம்...

    இதில்....வசிஷ்டர் என்கிற நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்கிற கருத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

    இந்த சடங்குகள் எல்லாம் ஐதீகம் என்கிற முறையில் நடைமுறையில் இருக்கின்றது...

    ஆனால் அம்மி...அருந்ததியை தாண்டி...இருமனங்களாய்... ஓட்டிக்கொண்ட தம்பதிகளுக்கு வினோத முறையில் ஒரு சடங்கு நடந்தது.

    ஆம்...புதுமண தம்பதிகள் இருவரது தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர். அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.

    முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

    சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்பட்டு திருமணத்திற்காக விற்கப்படுகின்றனர்.
    பெய்ஜிங்:

    சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. ஆனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள், 120 ஆண்கள் என்று இருக்கிறது. இதனால் இளம் பெண்கள் பற்றாக்குறையில் சீனா தத்தளிக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் மணப்பெண்கள் கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் வயது அதிகரித்து முதுமை அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என்று தெரிய வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு சிசுக்கொலையை கண்டு கொள்ளாமல் ஆதரித்தது.

    மேலும் சீனப்பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமணத்தை தள்ளி போடுதல் போன்றவையும் ஒரு காரணம்.

    சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனை கவனித்த ஆட்கடத்தல் கும்பல், பிரச்சினையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள வியட்நாமில் இருந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் ஆசைவார்த்தை கூறி கடத்தி வந்து, சீனாவில் மணப்பெண்களாக நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

    கம்போடியா, மியான்மர், லாவோ, நாடுகளில் இருந்தும் இளம்பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுகிறார்கள். வியட்நாம்- சீன எல்லையில் பெண்கள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இது சீன அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #ChinaMaleFemaleRatio #VietnameseGirlsTrafficked
    ×