search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullet Train"

    • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
    • புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை- அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

    இந்த புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


    • தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
    • இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.

    குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.

    ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    "இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.

    "இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
    • இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும்.

    மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை-அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

    இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும். இந்த 12-ல், 8 ரெயில் நிலையங்கள் குஜராத்திலும், 4 ரெயில் நிலையங்கள் மகாராஷ்டிராவிலும் இருக்கும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களுடன் பயணிக்க தோராயமாக 2.07 மணிநேரம் எடுக்கும், மொத்த நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம் ஆகும்.

    புல்லட் ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து, மேல்கட்டமைப்புகள் கட்டும் பணி மேம்பட்ட நிலையில் உள்ளது.

    குஜராத்தில் அமைந்துள்ள வாபி, பிலிமோரா, சூரத், ஆனந்த், அகமதாபாத் ஆகிய 5 புல்லட் ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன . இந்த புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    • 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடைகிறது.

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள "சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்" என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்டார்.

    இந்த முனையம் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட ரெயில்வே அமைச்சர்,"இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலுக்கான முனையம். சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையம், அகமதாபாத்," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியானதில் இருந்து 565,000க்கும் அதிகமான பார்வைகளையும் 20,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

    மேலும், குஜராத்தில் உள்ள பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடையும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

    • இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "புல்லட் டிரெய்ன்".
    • இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

    டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "புல்லட் டிரெய்ன்". இந்த திரைப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, ஜோய் கிங், பிரையன் டைரி ஹென்றி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கரேன் ஃபுகுஹாரா, லோகன் லெர்மன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    புல்லட் டிரெய்ன்

    இப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் "புல்லட் டிரெய்ன்" திரைப்படத்தை  உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது.


    புல்லட் டிரெய்ன்

    உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி நகைச்சுவை கலந்த "புல்லட் டிரெய்ன்" திரைப்படம் இந்தியாவில் முன்னரே வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • நாட்டின் வலிமை மிக்க பொறியாளர்களின் முயற்சியால் புல்லட் ரெயில் என்ற கனவு நனவாகும்
    • புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

    சூரத்:

    அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தில் 98 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தும் பணியும், தாதர் நகர் ஹவேலியில் 100 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 508 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதைக்கு 71 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது.

    இதில், குஜராத்தின் 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் 352 கி.மீ., நடைபாதையில் உள்ள ஸ்டேஷன்களுக்கு பல்வேறு பகுதிகளில் பைல்ஸ், அஸ்திவாரம், தூண்கள், பையர் கேப்கள், கர்டர்கள் வார்ப்பு மற்றும் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தி; புல்லட் ரெயில், மெட்ரோ, பிஆர்டி மற்றும் சபர்மதியில் உள்ள இரண்டு இந்திய ரெயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் பயணிகள் முனையம் ஆகியவை ஆகஸ்ட் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்-நவ்சாரி இடையே நடைபெறும் புல்லட் ரெயில் திட்டப் பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    புல்லட் ரெயில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 60 கி.மீ தூரம் தூண் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஒரே நேரத்தில் 150 கி.மீ.க்கு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பாலங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பிரிவு 2026 ஆம் ஆண்டு என்ற இலக்குடன் சூரத்தில் இருந்து பிலிமோரா வரை பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. புல்லட் ரெயில் திட்டமிட்ட நேரத்தில் முழு வேகத்தில் இயக்கப்படும்

    அகமதாபாத்-மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் பிரதமரின் கருத்துப்படி, எந்தவொரு பெரிய வேலையையும் செய்ய அனைவரின் முயற்சியும் தேவை. உங்களின் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிராக அரசை கேட்டுக் கொள்கிறேன். அகமதாபாத்தைப் போல மும்பைக்கும் புல்லட் ரெயில் தேவை. இந்தத் திட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது.

    இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் நபர்களும் இதில் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆமதாபாத்-மும்பை இடையே விடப்படும் புல்லட் ரெயிலுக்கு பெயர் சூட்டினால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அதிவேக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. #BulletTrain
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் அதிவேக புல்லட் ரெயில் விடப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து எந்தெந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில்களை இயக்கலாம் என்று ஆய்வு பணிகள் நடந்தன. அதில் 10 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    முதல் கட்டமாக மும்பையில் இருந்து ஆமதாபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

    2022-ம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த புல்லட் ரெயில் திட்டத்துக்கு சின்னம் வடிவமைக்கவும், பெயர் சூட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



    இதற்கு முன்பு ஏர்இந்தியா நிறுவனம் சின்னத்தை தேர்வு செய்யும்போது பொது மக்களிடம் பரிசு போட்டி நடத்தி சின்னத்தை தேர்வு செய்தது. அதுபோல இந்த புல்லட் ரெயிலுக்கும் சின்னத்தையும், பெயரையும் பொதுமக்களுக்கு போட்டி வைத்து தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவேக ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

    பொதுமக்கள் www.mygov.in என்ற இணையதளம் மூலம் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி புல்லட் ரெயிலுக்கான பெயரை அனுப்புவதற்கு கடைசி தேதியாகும்.

    சிறப்பான சின்னம் மற்றும் பெயர் சூட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். சிறப்பான சின்னத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். 5 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    அதுபோல புல்லட் ரெயிலுக்கு பொருத்தமான பெயர் சூட்டுபவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டி தேர்வுக்குழு இந்த பரிசுக்குரியவர்களை தேர்வு செய்து அறிவிக்கும். #BulletTrain
    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA) என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
    ஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #India #Railways #BulletTrain #Japan
    டோக்கியோ:

    மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.

    புல்லட் ரெயில்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுகிறது. ஜப்பானில் இயங்கும் புல்லட் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பானவை. எனவே ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    மும்பை:

    ஜப்பான், சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளில் அதிக வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது.

    அதே போல இந்தியாவிலும் புல்லட் ரெயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி முற்சிகள் மேற்கொண்டார். ஜப்பான் அரசு உதவியுடன் புல்லட் ரெயில் திட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் இருந்து குஜராத் தலைநகரம் அகமதாபாத்துக்கு ரெயில் இயக்க திட்டம் உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்து. இதில் பெருமளவு பணத்தை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு கடனாக வழங்குகிறது.

    புல்லட் ரெயிலுக்காக தனிப்பாதை அமைக்கப்படுகிறது. மும்பை-அகமதாபாத் இடையே பாதை அமைய உள்ள மொத்த தூரம் 508 கிலோ மீட்டர். அதில் குஜராத் மாநிலத்தில் 350 கிலோ மீட்டரும், மராட்டிய மாநிலத்தில் 155 கிலோ மீட்டரும், தத்ரா நாகர் காவேலி யூனியன் பிரதேசத்தில் 2 கிலோ மீட்டரும் அடங்கும்.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய அதிவேக ரெயில்வே துறை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த ஹவாசாகி ஜியாலஜிக்கல் என்ஜினீயரிங் நிறுவனமும் இணைந்து திட்ட கட்டுமான பணிகளை செய்கின்றன.

    இதற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 7 ஆயிரம் விவசாயிகள் உள்பட 60 ஆயிரம் பேருடைய நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நில ஆர்ஜிதம் தாமதம் ஆகிறது. இது வரை 2¼ ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக மும்பையில் நிலம் எடுப்பதில் பெரிய சவாலாக உள்ளது. மும்பை நிலத்தின் மதிப்பு மிக அதிகம். எனவே யாரும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

    விக்ரோலியில் கோத்ரேஜ் நிறுவனத்திற்கு சொந்தமான 8½ ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு மிக மிக அதிகம். இந்த நிலம் மட்டுமே ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புடையது என்று கோத்ரேஜ் நிறுவனம் கூறுகிறது.

    எனவே அந்த நிறுவனம் நிலத்தை விட்டு கொடுக்க மறுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மாற்றுப் பாதையில் ரெயில் திட்டத்தை நிறைவேற்றும்படி வலியுறுத்தி வருகிறது.

    அதே போல மராட்டியம், குஜராத் மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, மராட்டிய நவநிர்மான் சேனா போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    புல்லட் ரெயில் திட்டத்தை 2022-ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் நிலம் எடுப்பதற்கே பெரும் சிக்கலாக இருப்பதால் திட்டத்தை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பாந்த்ரா குர்லா பகுதியில் சுரங்கம் தோண்டி ரெயில்வே நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ரெயில் மும்பையில் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் வழியாக செல்கிறது. அந்த பணிகளும் முடங்கி இருக்கின்றன.

    ஆனால் மேல் நிலப் பரப்பில் அமைக்க வேண்டிய எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் 2018 டிசம்பருக்குள் நில ஆர்ஜிதத்தை முடிக்க வேண்டும் என்று 2019 ஜனவரியில் கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    மத்திய அரசின் புல்லட் ரெயில் திட்டம் கண்ணுக்கு தெரியாத மாய ரெயில் போன்றது. இது ஒருபோதும் நிறைவேறாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #rahulgandhi #pmmodi
    லக்னோ:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    இந்த தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இருநாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

    மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து மட்டங்களிலும் வர்த்தகங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் 15 பேர் வாங்கி இருந்த 2 லட்சம் கோடி ரூபாய் கடனை இந்த அரசு தள்ளுபடி செய்துள்ளது.

    பெரிய வியாபாரிகளை வாழ வைப்பதற்காக சிறிய வியாபாரிகளின் முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி உடைத்து விட்டார் என அவர் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பின் மூலம் உங்கள் பாக்கெட்டுகளில் இருந்த பணத்தை பறித்து விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.

    எல்லையில் டோக்லாம் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் சீன அதிபருடன் நமது பிரதமர் ஒன்றாக அமர்ந்து ஊஞ்சல் ஆடுகிறார்.  

    மோடியின் புல்லட் ரெயில் திட்டம் ஒரு மந்திர ரெயில் திட்டத்தை போன்றது. யதார்த்ததில் இது ஒருநாளும் சாத்தியமாகாது என்றும் ராகுல் குறிப்பிட்டார். #rahulgandhi #pmmodi
    ×