search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bully"

    • இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

    இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

    பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

     

    இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார்.
    • அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.

    பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார்.
    • போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெருவை சேர்ந்தவர் மதன பிரகாஷ் (வயது 36), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக மதன பிரகாஷை தாக்கியதாகவும், அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மதன பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடினர். தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும், மதனபிரகாஷ் அவர்களுக்கு உடன்படாமல் கீழே இறங்கிவர மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்மகை எடுக்கச் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிவந்தார்.

    உடனடியாக திருமங்கலம் டவுன் போலீசார் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் செல்போன் கோபுரம் மீது ஏறி மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ×