என் மலர்
நீங்கள் தேடியது "bypoll"
- பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார்.
- மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால், கலிபோர்னியாவில் அமி பெரரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில் ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து 4-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.
- பீகார், உ.பி.,யில் தலா ஒரு தொகுதிகளை பா.ஜ.க வெற்றி பெற்றது.
- ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதியை தக்கவைத்தது.
புதுடெல்லி:
பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
உ.பி.,யின் ராம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, சமாஜ்வாதி வேட்பாளர் ஆசிம் ராஜாவை 33,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சமாஜ்வாதி கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியை பா.ஜ.க முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.
இதேபோல், உ.பி.,யின் கதவுலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் மதன் பையா, பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமார் சைனியை 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பீகாரில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கேதார் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் சிங்கை 76,653 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஒடிசாவின் பதம்பூர் தொகுதிக்கு போட்டியிட்ட ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியின் பர்சா சிங் பரிகா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை 38.252 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ...
சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பனுபிரதப்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி வெற்றி பெற்றார்.
ராஜஸ்தானின் சர்தர்ஷகார் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா 26,852 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அசோக்குமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
- தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது
புதுடெல்லி:
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
- ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.
பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹெச்.டி. குமாரசாமி மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
- அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் சன்னபட்னா தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அவர் தற்போது மக்களவை எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு மந்திரியாக உள்ளார்.
இதனால் சன்னபட்டனா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக, சன்னபட்னா காங்கிரஸ் வேட்பாளராக பா.ஜ.க.-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த யோகேஷ்வரா நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போது இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
- வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது.
- பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார்.
மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியன் மொகேரி, பாரதிய ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தில் தனது முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். பின்பு கடந்த 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (13-ந்தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்தது. பிரியங்கா காந்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
பிரியங்கா காந்தி இன்று காலை வயநாடு பத்தேரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிற்பகல் கோழிக்கோடு திருவம் பாடியில் நடைபெற்ற ரோடு-ஷோவிலும் கலந்து கொண்டார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார். அவர் பிரியங்கா காந்தியுடன் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான சத்தியன் மொகேரி கல்பெட்டாவில் ரோடு- ஷோவில் பங்கேற்று இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரி தாஸ் பத்தேரி சுங்கச்சாவடி பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து பிரசாரத்துக்காக வந்திருந்த தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேற தொடங்கினர். வெளி நபர்கள் யாரும் தொகுதியில் தங்கியிருக்கிறார்களா? என்று கண்காணிக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. #ParliamentElections #TamilnaduByElection #Nomination
