என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAA"

    • தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.
    • தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் அவரது மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் அவருடன் ஈத் விழாவில் கலந்துகொண்டார்.

    ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    குடியுரிமை (திருத்தம்) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாரும் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

    தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது.

    இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். ஆனால் வங்காளத்தில், தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி
    • மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    மோடி தலைமையிலான பாஜகவை மக்கள் நிராகரிப்பதற்கு 100 காரணங்கள் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அவை,

    1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு

    2. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    3. 8250 கோடி தேர்தல் பத்திர ஊழல்

    4. ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல்

    5. 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

    6. கார்ப்பரேட்டுகளின் கடன் 25 லட்சம் கோடி தள்ளுபடி

    7. GST வரி

    8. கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்

    9. சிறுகுறு தொழில்கள் முடக்கம்

    10. IT, ED, CBI போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விட்டது

    11. CAG- 7.5 லட்சம் கோடி ஊழல்

    12. ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் செயலிழப்பு

    13. PM-Cares ஊழல்

    14. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தோல்வி

    15. இந்தியாவின் கடன் 2014-ல் 55 லட்சம் கோடி ஆனால் பாஜக ஆட்சியில் 204 லட்சம் கோடி

    16. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

    17. சாமானிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து 35,000 கோடி அபேஸ்

    18. CAA

    19. பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்

    20. மோடி அரசு விளம்பரங்களுக்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது

    21. சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில் பாஜகவின் முறைகேடு

    22. அக்னிபாத் திட்டம்

    23. புல்வாமா தாக்குதல்-40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது

    24. இந்திய பாராளுமன்ற கட்டிடத்தில் வண்ண புகை குண்டுகளை கொண்டு தாக்குதல்

    25. எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    26. ஊடகங்களின் மீதான அடக்குமுறை

    27. வேலையில்லா திண்டாட்டம்

    28. பணவீக்கம்

    29. தனிநபர் வருமானம் குறைப்பு

    30. 5-டிரில்லியன் டாலர் இலக்கு தோல்வி

    31. பட்டினி குறியீட்டில் 111-வது இடம்

    32. சாதிவாரி கணக்கெடுப்பு

    33. இந்திய எல்லையான லடாக்,அருணாச்சல பிரதேசத்தை சீனாவிற்கு தாரைவார்த்தது

    34. இந்தி/சமஸ்கிருத மொழிகளுக்கே முன்னுரிமை

    35. சுங்கச்சாவடிகளில் வசூல் வேட்டை

    36. எட்டு வயது சிறுமி ஆசிபா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது

    37. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    38. உத்திரபிரதேசத்தில் பட்டியலின சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    39. பாஜக எம்.பி.பிரிட்ஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

    40. மணிப்பூரில் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டது

    41. உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது

    42. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% ஆக குறைப்பு

    43. பாஜக ஆட்சியில் பட்டியலின / பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் 40% சதவீதம் உயர்வு

    44. பாஜக ஐ.டி.விங் நிர்வாகிகள் 3 பேர் 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது

    45. கல்வி சுதந்திர குறியீட்டில் பின்னடைவு

    46. புதிய கல்விக் கொள்கை

    47. சிறுபான்மை மாணவர்களுக்கான ஆதரவு ஊதியத்தை ரத்து செய்தது

    48. 141 நாடாளுமன்ற எம்பிக்கள் பணியிடை நீக்கம்

    49. தமிழ்நாட்டிற்கான நிதி பங்கிட்டில் பாகுபாடு

    50. மாநில சுயாட்சியில் ஓன்றிய அரசின் தலையீடு

    51. பழங்குடியின பெண் குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காதது

    52. நாடாளுமன்ற நிலை குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் விகிதம் 71% இருந்து 21% ஆக குறைப்பு

    53. பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது

    54. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

    55. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்ளவில்லை

    56. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக

    57. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்ட பாரத் மாலா, சாகர் மாலா, உதான் திட்டங்கள்

    58. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு

    59. 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ஊழல்

    60. ஸ்பெக்ட்ரம் ஊழல்

    61. ஸ்கில் இந்தியா மோசடி

    62. 9,000 கோடி மோசடி செய்த விஜய் மல்லையா மற்றும் 22,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியை வெளிநாடுகளுக்கு தப்ப வைத்தது

    63. தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் ஊழல்

    64. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

    65. ONGC ஊழல்

    66. டெண்டர் முறைகேடு

    67. கேமன் தீவு FDI ஊழல்

    68. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவன ஊழல்

    69. வியாபம் ஊழல்

    70. DMAT ஊழல்

    71. போலி நாணய மோசடியில் பாஜகவினர்

    72. ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்

    73. குஜராத்தில் அதானிக்காக நில மோசடி

    74. அம்பானி, அதானி சொத்து மதிப்பு பாஜக ஆட்சியில் 80% உயர்ந்துள்ளது

    75. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.83.2 ஆக வீழ்ச்சி

    76. மோடி அரசு ஊழல் மூலம் தனது கட்சியின் சொத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சொத்துக்களையும் பன்மடங்கு பெருக்கி உள்ளது

    77. 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து பிறகு செல்லாது என அறிவித்தது

    78. பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் 161 வது இடம்

    79. உலக ஊழல் குறியீட்டில் 93-வது இடம்

    80. கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலை ஒரு லட்சத்திற்கும் மேல்

    81. இந்தியாவில் படித்த இளைஞர்கள் 83% பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

    82. வெளிநாட்டு முதலீடு உடைய நிறுவனங்கள் பாஜகவிற்கு நன்கொடை

    83. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீரில் மோடி ஆட்டிறைச்சி சாப்பிடும் மக்களை இழிவு படுத்தி இருக்கிறார்

    84. தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் சார்ந்தே உள்ளது

    85. மோடி சொன்ன அனைவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் வராதது

    86. 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டுள்ளன

    87. பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்து தப்பித்துள்ளனர்

    88. இந்திய குடும்பங்களின் கடன் அளவு உயர்வு

    89. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி

    90. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை அடக்குமுறை அதிகரிப்பு

    91. இன்டர்நெட் இணைப்பை முடக்குவதில் இந்தியா முதலிடம்

    92. ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் மூலம் 1230 கோடி வசூல்

    93. மக்கள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

    94. EVM தயாரிப்பில் பாஜகவினர்

    95. இந்தியாவில் 19.3% குழந்தைகள் 24 மணிநேர இடைவெளியில் பட்டினியால் தவிக்கின்றனர்

    96. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது

    97. மணிப்பூரில் கார்கில் போருக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த ராணுவ வீரரின் மனைவி பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது

    98. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளில் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கிறது

    99. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது

    100. மோடி ஆட்சியில் வாராக்கடன் 55.5 லட்சம் கோடி

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    • மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
    • நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • 2019-ம் ஆண்டும் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    • கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டம் இந்தியா பாராளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்கு முன்னதாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற முடியும்.

    சுமார் நான்கு வருடத்திற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி சிஏஏ நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதற்காக விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக இணைய தளம் உருவாக்கியிருந்தது. டெல்லியில் விண்ணப்பத்திருந்தவர்களுக்கு கடந்த 15-ந்தேதி முதற்கட்டமாக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று முதல் மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தந்த மாநிலத்தில் இதற்கான அதிகாரம் பெற்ற மாநில குழு இந்த சான்றிதழை வழங்கும்.

    2019-ம் ஆண்டு இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சிஏஏ இந்த நிலத்தின் சட்டம். எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடுத்துகிறது என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சிசிஏ-வை தங்களுடைய மாநிலத்தில் அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில். மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவரான ஜோசப் பிரான்சிஸ் பெரேராவிற்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இன்று குடியுரிமை வழங்கினார். கோவா மாநிலத்தில் இருந்து குடியுரிமை பெறும் முதல் நபர் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோசப் பிரான்சிஸ் பெரேரா கோவா மாநிலத்தை சேர்ந்தவர். 1961 ஆம் ஆண்டு போர்த்துகீஸ் நாட்டிலிருந்து கோவா விடுதலை அடைவதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானிற்கு படிப்பிற்காக சென்றுள்ளார். பின்னர் பாகிஸ்தானில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே குடியுரிமையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடிபெயர்ந்த அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், குடியுரிமை திருத்தச்சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×