என் மலர்
நீங்கள் தேடியது "camera"
- இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார்.
- புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கோமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அவரது மணிபர்சை தவறவிட்டார். அதில் ரூ.8 ஆயிரம் இருந்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் காணாமல் போன மணி பர்ஸை தேடி கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
- வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.
இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.
அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
- மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 39 தொகுதிகளிலும் ஸ்டிராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் அதிகாரிகளும் ரோந்து சென்று வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது. சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள தொண்டர்கள் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி காவல் இருக்கிறார்கள்.
இந்த வகையில் தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் தலா 9 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் பாட்டில் நொறுக்கு தீனிகளும் வாங்கி கொடுக்கிறார்கள்.
மொத்தம் 44 நாட்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகலாம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
- ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.
- மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.
இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.
இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18 மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி வருகிறது.
- கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது செல் போன்
- கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது.
பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கப்ட்டுவந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave காப்பி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில்உள்ள குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல் போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை அடுத்து போலீஸ் விசாரணை நடத்தியது.
அந்த செல் போன், அந்த காப்பி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள third wave நிர்வாகம், அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது. காப்பி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் விவாதமாகியுள்ளது
- அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்கணிப்பார்
பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
- விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது.
- கேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடத்த விபத்து ஒன்றில் தொழிலதிபரின் மனைவி ஓட்டி வந்த சொகுசு SUV கார் மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டுறதுந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் மற்றும் அவரது மகள் ஆம்னா என்று பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து ஏற்படுத்தியதும் காரை பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய அந்த பெண் இரண்டு பேரை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வு துளியும் இல்லாமல் போலீஸ் நம்மை கைது செய்துவிடும் என்றகேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.
விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நடாஷா பிரபல தொழித்ததுபரின் மனைவியும் ஆவர். விபத்து தொடர்பாக நடாஷாவிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது, நடாஷாவுக்கு மன ரீதியான பிரச்சனை உள்ளதென்றும் கடந்த 2005 முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் நீதிபதி முன்னாள் உயிரிழந்த தந்தை மகளின் உறவினர்களும், நடாஷாவின் உறவினர்களும் தோன்றினர். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடாஷாவுக்கு மன்னிப்பு வழங்கியதால் நீதிமன்றம் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடாஷா குடும்பத்திடம் இருந்து [ரத்தம் படிந்த] பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பாகிஸ்தானில் ஷரியத் சட்டப்படி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப்பிரிவுக்கு க்விசாஸ் மற்றும் தியாத் என்று பெயர்.
- நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தி.நகர், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில் தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இன்று ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார். மேலும் தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
ரெங்கநாதன் தெருவை சுற்றிலும் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் கைகளில் டேக் (அடையாள அட்டை) கட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியும்.
நிறைய இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுத்துள்ளோம்.
தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களில் முகம் கண்டறியும் வசதி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டத்தில் குற்றவாளி இருந்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியும்.
பழைய குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனுடன் ஒப்பிட்டு தி.நகரில் கூட்டத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து உடனே எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.
தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் உள்ளதால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சென்னை நகரில் மெட்ரோ உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியில் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
- இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
திருவாரூர்:
திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாகஇயங்கி வருகிறது.
இந்த மருத்துவ மனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்தி ற்காக அனுமதித்துள்ளார்.
அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர் அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார்.
அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார்.
இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக முயன்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர்.
இந்த காட்சிகள் மருத்துவம னையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின் மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.
- தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது.
இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை கண்காணிக்கவும், தொண்டியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ரோட்டரி சங்கமும், ராமநாதபுரம் தனியார் நிறுவனமும் மற்ற தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்தது.
அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் முருகேசன், பட்டயத் தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா, முன்னாள் தலைவர்கள் மரிய அருள், சிவராமகிருஷ்ணன் ரஜினி, வீரகுமார் முன்னிலை வகித்தனர். தொண்டி நகர் பகுதியில் 16 இடங்களில் 60 காமிராக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அனைத்து காமிராக்களையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.
- கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
- டி. எஸ்.பி. தொடங்கிவைத்தார்
கரூர்:
குளித்தலை அருகே தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கண்டுபிடிக்க ஏதுவாகவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தல் பெயரில் கள்ளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழர் தேசம் மாவட்ட செயலாளர் அருள்ராஜ், தனது சொந்த பொறுப்பில் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர், இதனை குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார், இதுபோன்று குளித்தலை காவல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இப்பகுதிகளில் குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கலாம் என கூறினார், கள்ளைப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்,
உடன் தோகைமலை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.