என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cameras"
- புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.
இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.
நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும்.
- போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திருட்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் தரமான கேமரா அமைப்பது குறித்து ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள் அதே போல் அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் தரமான கேமரா வைக்க வேண்டும் . பல்வேறு வியாபார கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சந்தேகப்படும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ, தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தாலோ, எவரேனும் நின்று கொண்டு நோட்டமிட்டாலோ உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்தவும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், சேவல் சண்டை,லாட்டரி சீட்டு,கஞ்சா , பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்கும் வகையில் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .
- காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
- டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஊட்டி,
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு காமிரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கி ராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது.
ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
இந்தநிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதேபோல் டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-
இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன காமிராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம்.
தற்போது பொருத்தப்படும் காமிராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி,
கூடலூர் நகராட்சி உட்பட்ட காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கூடலூர் நகராட்சி மூலமாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.இதற்கு இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர். காசிம்வயல் பகுதி மக்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கும், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையாளர் ப்ரான்ஷிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகாா் அளித்தனா்.
- இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் புலி உலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் புகாா் அளித்தனா்.அதைத் தொடா்ந்து, புலி நடமாட்டம் உள்ள பாதையில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை வனத் துறையினா் பொருத்தினா்.இதன் மூலம் புலியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்றும், பொதுமக்கள் பயமின்றி இருக்கலாம் என்றும் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
- தேவகோட்டையில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. நகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் உதவியுடன் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நகர் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், சொந்த செலவில் 3-வது வார்டு அண்ணாசாலை 5-ம் வீதியில் கண்காணிப்பு காமிராக்கள் நிறுவினார். இந்த நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், இதேபோல் நகரில் அனைத்து வார்டுகளிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பட்சத்தில் நகர்பகுதி முழுவதும் பாதுகாப்பாக அமையும். கண்காணிப்பு காமிராக்கள் ஒவ்வொரு வீடுகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது. நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.
- ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வலபாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பே ட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
இந்து முன்னணி சார்பில் நடக்கும் 30-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகிக்கிறார்.
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகிறார்.
அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொள்கிறனர்.
ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.
முன்னதாக பிற்பகல் தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இன்று மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வல பாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுரங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.
அசம்பா விதம் ஏதும் ஏற்ப்பட்டால் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.
ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி.சந்தோஷ் குமார், திருச்சி டி.ஐஜி சரவணக்குமார், தஞ்சை டி.ஐ.ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார், ரவளிபிரியா, சுந்தரவதனம், சீனிவாசன், ஜவகர், துரை, ஜெயசந்திரன், புரோஸ் அப்துல்லா, வஞ்சிதா பாண்டி, நிஷா, 10 ஏ.டி.எஸ்பி, 37 டி.எஸ்பி.கள், 38 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுக்காப்பு பணிகளை திருச்சி மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.
இந்தநிலையில் முத்துப்பே ட்டை சுற்று பகுதியில் உள்ள 14 டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முத்துப்பேட்டை நகர் பகுதி மற்றும் அருகே உள்ள பகுதியில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மதுக்கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற விதி உள்ளது.
இருப்பினும் சிறுவர்களுக்கும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் இளம் தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி கெட்டுப் போகிறார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் கூறுகிறார்கள்.
இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 3 ஆயிரம் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஒரு கடைக்கு 2 கேமராக்கள் வீதம் 6 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், போலி மதுபானங்கள் விற்பனை தடுத்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கேமராக்கள் பொருத்த ரூ.5 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் கண்காணிப்பு அறைகளும் அமைக்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். #Tasmac
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக வைத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து போலீஸ்காரர் தர்மன் என்பவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் கேமரா பார்வையில் சிக்கினார். இப்படி கண்காணிப்பு கேமராக்கள் குற்றம் செய்யும் அனைவரையுமே காட்டி கொடுத்து வருகிறது.
அண்ணா சாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகள் மற்றும் 15 ஆயிரத்து 345 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் வசதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-
கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் அளவுக்கு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துப்பறிவதில் போலீஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை கண்கள், மூக்கு மூலம் மோப்பம் பிடித்து குற்றவாளிகளை கண்டறிந்து வெளிப்படுத்துகின்றன.
தற்போது போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நாய்களின் இடுப்பில் கேமராக்கள் பொருத்தப்படும். அந்த கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே பார்க்க முடியும். மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.
அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. #USPoliceDogs
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இப்போதே தொடங்கியுள்ளனர்.
அடுத்த மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த வார இறுதியிலேயே புத்தாடை மற்றும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் அலை மோதுவார்கள்.
குறிப்பாக வருகிற 2 மற்றும் 3-ந்தேதிகளில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டிபஜார், பனகல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு சுமார் 500 போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாளை மறுநாள் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட உள்ளது. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விட்டால் அதனை கண்காணித்து காட்டி கொடுக்கும் வகையிலும் ‘‘சிறப்பு சர்வர்’’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற நடைமுறைகளை தி.நகரில் போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.
வடசென்னை பகுதியிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 135 கேமராக்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்துவிட் டால் பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 சதவீதம் கேமரா பொறுத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிடும்.
யானைக்கவுனி பகுதியில் 573 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான பணிகள் முடிந்து விட்டன. யானைக் கவுனி போலீஸ் நிலையத்தில் பிரத்யேகமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல வண்ணாரப் பேட்டை பகுதியில் 591 கேமராக்களும், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் 509 கேமராக்களும் ராயபுரம் பகுதியில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் சுமார் 2500 கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ரோடு ஜி.ஏ. ரோடு சந்திப்பில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்