search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car collide"

    கிழக்கு கடற்கரை சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident
    சோழிங்கநல்லூர்:

    பாலவாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23) என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் நோக்கி திரும்பி வந்தார்.

    அப்போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident

    கிருமாம்பாக்கம் அருகே தனியார் நிறுவன காவலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே தமிழக பகுதியான ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுப்பாளையம் சிவனார்புரம் சாலையை சேர்ந்தவர் காசிதுரை (வயது55). இவர் புதுவை- கடலூர் ரோட்டில் உள்ள சீனுவாசா கார்டனில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது புதுவையில் இருந்து கிருமாம்பாக்கம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பின்னர் பதட்டத்தில் காரை ஓட்டி சென்ற டிரைவர் சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த காசிதுரையை கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் ஆகியோர் விரைந்து வந்து மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காசிதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டையில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மில்லடி பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 50). உதய மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). இவர்கள் 2 பேரும் தச்சு வேலைக்கு செல்வதற்காக முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் மேம்பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் ஓட்டி வந்த கார் 2 பேர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தவர். செல்வமணி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் மனோகரனிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது மாமியார் வீடு செல்வதற்காக வந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.

    நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது19). இவர் 11-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று சுரேஷ் பொருட்கள் வாங்குவதற்காக நாற்கர சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து விசாரணையின் பேரில் சாத்தூர் சோதனை சாவடியில் சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மடக்கி பிடித்தார். பின்னர் காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பென்னாகரம் அருகே சுற்றுலா சென்றபோது கார் புளியமரத்தில் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்யோன் (வயது36). இவர் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ஜெனிபர் (32) மற்றும் உறவினர்கள் ஆமேஷ் (13), சித்ரா (20) ஆகியோருடன் ஒகேனக்கலுக்கு காரில் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். காரை சினியோன் ஓட்டி வந்தார்.

    சினியோன் பெற்றோர்களான திருவண்ணாமலை மாவட்டம், மேல்புதேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி தேவராஜ் (60)- நீலாவதி (55) ஆகியோருடன் உறவினர்களின் குழந்தைகளான ரோகித் (4), ஜெயலெட்சுமி (12), ஏஞ்சல் (11), ரேஞ்சல் (10), கவிதா (7)ஆகிய 7 பேரை செல்லும் வழியில் அழைத்து சென்றார்.

    அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் செல்லும் சாலையில் ஏறு பள்ளி அருகே வந்த போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரில் இருந்த சினியோன் உள்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×