என் மலர்
நீங்கள் தேடியது "Car race"
- தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
- அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார் பந்தயம் போட்டியை நடத்துகிறது.
சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது.
தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்துக்காக தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணிகளை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி இப்போட்டிக்கான பணிகள் 10 நாட்களில் நிறைவடையும். 3 வருடம் இப்போட்டியை நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளோம். அடுத்த 2 வருடமும் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சென்னை தீவுத்திடலில் இப்போட்டியை நடத்துகிறோம் என தெரிவித்தார்.
- அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
- மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
* கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?
* மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?
* கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.
* அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
* மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.
* கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.
* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?
* சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.
* பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
- சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.
ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
- சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
- தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
- விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பார்முலா கார் பந்தயம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை பார்வையிட வருவோர் பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தப் பொருளும் அரங்குக்குள் எடுத்து வரக்கூடாது. அப்படி எடுத்து வந்தால் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்பட மாட்டாது. கூர்மையான பொருட்களான பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல் ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள் மற்றும் பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், ஆயுதங்கள்-துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் லேசர்ஸ்-லேசர் லைட்டுகள், விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள், ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகா போன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீப்பற்றக்கூடிய பொருட்களான தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம், போதைப் பொருள் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் பார்வையாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
புகையிலை பொருட்கள், அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள், பிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை, ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள், வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது.
குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள், டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம், புகைபிடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.
தனியார் வாகனங்கள் - ஸ்கேட்பார்டுகள், ரோலர் பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.
உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்-டாப், லேப்-டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
சாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான, பாரபட்சமான மொழி, தொப்பிகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
- காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) போட்டிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த சாலைகளில் இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்டிரல் ரெயில் நிலையம், ஈ.வெ.ரா.சாலை வழியாக சென்றடையலாம்.
* அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.
* சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
* காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
* சென்டிரலில் இருந்து அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
* முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈ.வெ.ரா.சாலை, சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்
* கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் சனி, ஞாயிறு தினங்களில் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் 'லைப் என்ற ரேஸ்ல ஸ்பீடா போகனும் லப்புல' என தொடங்கும் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். மேலும் ஃபார்முலா 4 கார் பந்தயம் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுயுள்ளது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
- வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
பார்முலா 4 கார் பந்தயத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- 60 வயதான கீனு ரீவ்ஸ் முதல் முறையாக தொழில்முறை கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
- கார் பந்தயத்தில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேட்ரிக்ஸ், ஜான்விக் போன்ற படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில், டொயோட்டா ஜிஆர் கோப்பையில் பங்கேற்றார். இதன்மூலம் தொழில்முறை கார் பந்தயத்தில் அவர் அறிமுகமானார்.
60 வயதான கீனு ரீவ்ஸ் பந்தயத்தின் 45 ஆவது நிமிடத்தில் ரேஸ் தடத்திலிருந்து வெளியேறி புல் தரைக்குள் சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு மீண்டும் ரேஸ் தடத்திற்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
35 போட்டியாளர்களின் முதல் 31 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அவ்வகையில் இப்போட்டியில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- விடாமுயற்சி படத்தின் டப்பிங் நேற்று தொடங்கியது.
- குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.
இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் நேற்று (திங்கள் கிழமை) தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார்.
அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கார் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அஜித் குமார் அறிவித்து இருக்கிறார்.
- கார் பயிற்சி தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உலக அளவில் சிறப்புக்குரிய "24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class" கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு. அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்."
"இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்."
"விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- அஜித் குமார் ரேசிங் என்ற கார் பந்தய கம்பனியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார்.
- ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த காரில் அஜித்குமார் ரேசிங் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவும் அந்த காரில் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.