என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car"

    • சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.

    கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அந்த வீடியோவில் அங்கிருந்த பொது மக்கள் சிலர் சிறுவனை தாக்கியது தொடர்பாக கேட்டதற்கு தன் செயலை நியாயப்படுத்தி பேசிய கார் உரிமையாளர், காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.

    சம்பந்தப்பட்ட சிறுவன் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளரின் மகன். படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் மீது பொது மக்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    வீடியோ வைரலானதை அடுத்து சம்பவத்த உறுதி செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கார் எண்ணைக் கொண்டு பொண்ணியம்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஷின்ஷாத் (20) என்கிற கார் உரிமையாளரை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

    சிறுவனின் தாய் கொடுத்த புகாரை அடுத்து முகமது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கார் உரிமையாளரின் செயலை கண்டு மாநில கல்வித் துறை, சுகாதாரத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • கியா செல்டோஸ் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் தனது காரில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
    • பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் கோபமுற்ற வாடிக்கையாளர் தனது காரை தீ வைத்து எரித்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபர் தனது கியா செல்டோஸ் காரை தீ வைத்து எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கியா சர்வீஸ் தனக்கு திருப்திகரமாக இல்லை என்ற விரக்தியில் இருந்த நபர் கோபத்தில் இவ்வாறு செய்து இருக்கிறார். பின் கியா சர்வீஸ் செண்டர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் காரை எரித்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.

    கியா செல்டோஸ் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகவாகவே காரின் என்ஜினில் குறைபாடு ஏற்பட்டு வந்ததாக அதன் வாடிக்கையாளர் குற்றம்சாட்டி வருகிறார். என்ஜின் குறைபாடை சரி செய்ய அந்த நபர் சர்வீஸ் செண்டர் சென்றுள்ளார். காரில் ஏற்படும் புகார்களை சர்வீஸ் செண்டர் மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். பின் சர்வீஸ் செய்யும் ஊழியர், மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் கோபமுற்ற வாடிக்கையாளர் தான் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து, தனது கியா செல்டோஸ் முழுக்க ஊற்றினார். கார் சர்வீஸ் செண்டரின் உள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் தனது காருக்கு தீ வைத்து எரித்தார். தீ வைத்ததும் கார் முழுக்க தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்த கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயணைப்பானை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்.

    கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கியா சர்வீஸ் செண்டர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஆண்டு ஸ்லேவியா மாடல் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்லேவியா மாடலின் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இம்முறை ஸ்கோடா ஸ்லேவியா விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    அதன்படி ஸ்கோடா ஸ்லேவியா ஆம்பிஷன் 1.0 AT மாடல் விலை ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT விலை ரூ. 31 ஆயிரமும், ஆக்டிவ் 1.0 MT மற்றும் ஆம்பிஷன் 1.0 MT வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் 1.0 MT (சன்ரூப் இல்லா) மாடல் மற்றும் ஸ்டைல் 1.5 MT விலை ரூ. 21 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 1.5 DSG விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைல் 1.0 AT மாடலின் விலை ரூ. 11 ஆயிரம் உயரந்துள்ளது. 

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இன்னோவா ஹைகிராஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய வெளியீட்டை சில தினங்களுக்கு முன்பு தான் உறுதிப்படுத்தியது. தற்போது புதிய இன்னவோ ஹைகிராஸ் மாடல் நவம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான புது டீசரையும் வெளியிட்டு உள்ளது.

    டீசரில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் படம் சில்ஹவுட் முறையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் உறுதியான பெல்ட்லைன், பொனெட்டில் ஷார்ப் கிரீஸ்கள், வெளிப்புற கண்ணாடிகளின் கீழ் மாடல் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் இந்த காரில் முற்றிலும் புதிய ரேடியேட்டர் கிரில், புது ஹெட்லைட்கள் இண்டகிரேட் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும். புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

    சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு நவம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • பெட்ரோல், டீசல் மாடல்கள் மட்டுமின்றி மாருதி சுசுகி CNG கார்களுக்கும் இந்த முறை சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது அரினா மாடல்களுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த முறை ஆல்டோ K10, ஆல்டோ 800, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், டிசையர் மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஆல்டோ K10 AMT வேரியண்ட்களுக்கு ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி செலரியோ மாடலின் VXi மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மேனுவல் வேரியண்ட்களான LXi, ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 41 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் AMT வேரியண்ட்களுக்கு ரூ. 46 ஆயிரமும், CNG வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 41 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் AMT மாடலுக்கு ரூ. 21 ஆயிரமும், CNG வெர்ஷனுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. ஆல்டோ 800 வாங்குவோருக்கு ரூ. 36 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி டிசையர் AMT மாடலை வாங்குவோருக்கு ரூ. 32 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 17 ஆயிரத்திற்கான சலுகைகள் வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் காரை வாங்கும் போது ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் உற்பத்தி 25 ஆண்டுகளுக்கும் முன்பே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய உற்பத்தியில் இருபது லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கும் ஹோண்டா சிட்டி இருபது லட்சமாது யூனிட்டாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகாரா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    1997 டிசம்பர் மாத வாக்கில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகளை துவங்கியது. முதன் முதலில் ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு தேவை மட்டுமின்றி 16 நாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் இந்திய வியாபாரத்தை கட்டமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது. 2020 வாக்கில் கிரேட்டர் நொய்டா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒற்றை உற்பத்தி ஆலை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. 450 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இத்துவர தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    • ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புது Q5 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • ஆடி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்தி 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு டெக்னாலஜி வேரியண்டை விட ரூ. 84 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கார் டாப் எண் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் கிடைக்கிறது. இந்த கார் பிளாக்டு-அவுட் லோகோ, கிளாஸ் பிளாக் முன்புற கிரில், பிளாக் ரூப், பிளாக் ORVM கேப்கள், 19 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கிராபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஐபிஸ் வைட் மற்றும் புதிய டிஸ்ட்ரிக்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இது தவிர ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 12.2 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், முன்புறம் பவர்டு இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 249 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய வெளியீட்டுக்கு முன் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தேனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்பிவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முனஅ இந்தோனிசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்பை படங்களில் உள்ள இன்னோவா மாடல் உற்பத்திக்கு தயார் நிலையில், இருப்பது போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த கார் இன்னோவா செனிக்ஸ் ஹைப்ரிட் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதே கார் இன்னோவா ஹைகிராஸ் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்பை படத்தில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. இதில் ஹெக்சகோனல் கிரில், க்ரோம் அக்செண்ட்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை இன்னோவா மாடலில் ஆல்-எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம். தோற்றத்தில் இந்த கார் தற்போதைய மாடலை விட அதிக பிரம்மாண்டம் மற்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும்.

    புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Photo Courtesy: Kompas Otomotif

    • சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ராட்சத குழாயில் மோதியது.
    • பலூன் வெளிவந்ததால் டிரைவர் உயிர் தப்பினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). வாடகை கார் டிரைவர்.

    காரைக்குடியில் இருந்து இவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கோவை சென்று விட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி திரும்பி கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிலநீர்பட்டி பிரிவில் இரவில் வந்த போது வளைவான சாலையில் கார் வேகமாக திரும்பியது.

    அப்போது கட்டுப்பா ட்டை இழந்த கார் சாலையோரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய் மீது மோதியது.

    இதில் காரின் என்ஜின் பகுதி நொறுங்கியது. கார் வேகமாக மோதியதால் டிரைவர் சீட்டின் முன்பகுதியில் இருந்த பலூன் வெளி வந்தது. இதன் காரணமாக காரை ஓட்டிய செந்தில்முருகன் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • தாசில்தாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    செந்துறை தாசில்தாராக இருப்பவர் விக்டோரியா பாக்கியம். இவர் அரியலூரில் வசித்து வருகிறார். இவர் பணி முடிந்து அரசு காரில் அரியலூருக்கு வந்தார். அந்த வாகனத்தை டிரைவர் பழனிவேல் ஓட்டி வந்தார். அரியலூரில் உள்ள வீட்டில் தாசில்தார் இறங்கிய பின்னர், டிரைவர் பழனிவேல் அந்த காரை செந்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு ஓட்டிச்சென்று, அங்கு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல் காலை அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கண்டிப்பு காரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரேனும் காரின் கண்ணாடியை உடைத்தார்களா? அல்லது வேறு யாரேனும் உடைத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் செந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டன. விலை மாற்றம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஒட்டுமொத்தமாக உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நவம்பர் 7 ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இம்முறை டாடா கார்களின் விலை 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி டாடா ஹேரியர் மாடல் விலை தற்போது ரூ. 30 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டாடா சபாரி மாடலின் விலை ரூ. 20 ஆயிரமும், நெக்சான் மாடல் விலை ரூ. 18 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ், டிகோர் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹேச்பேக் மாடலான டாடா டியாகோ விலை தற்போது ரூ. 8 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது. டாடா பன்ச் விலை ரூ. 7 ஆயிரம் அதிகரித்துள்ளது. இவை தவிர டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. டாடா எலெக்ட்ரிக் வாகனங்களில் 50 ஆயிரமாவது யூனிட்டாக நெக்சான் EV மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் இருந்து வெளியிட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    ×