என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cargo truck"
- இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
திண்டுக்கல்லில் இருந்து தில்லைவிளாகம் கிராமத்திற்கு தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முத்து ப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென சாலையில் உள்ள சென்டர் மீடியனில் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் லாரியின் முன்பகுதியில் உள்ள இரு சக்கரமும் துண்டாகி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் லாரியை ஓட்டி வந்த டிரை வரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த பாலகிரு ஷ்ணன் (வயது 27) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் அப்பகு தியில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ங்கள் மாற்று பாதையில் திருப்பி அனுப்ப ப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.
- புருஷோத்தமன் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் புரு ஷோத்தமன் (வயது 33). இவர் மோட்டார் சைக்கி ளில் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியி லிருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு லாரி புருஷோத்தமன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இவர் ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே புருஷோத்தமன் பரிதாப மாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
- லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு குறிப்பாக ஜவுளி, முட்டை, இரும்பு தளவாடங்கள், சிமெண்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கெமிக்கல், கல் மாவு, ஜவ்வரிசி, வெல்லம் தேங்காய், காய்கறிகள் உள்பட பல் வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன .
இதே போல வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு ஆப்பிள் மற்றும் ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைத்து வருகிறது.
சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேஷ் உட்பட வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது .
இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. மேலும் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக லாரி தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, பட்டாசு, இரும்பு தளவாடங்கள், கெமிக்கல், கல்மாவு, ஜவ்வரிசி, தேங்காய், வெல்லம், மஞ்சள், அரிசி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் ஆயிரம் கோடிக்கும் மேலான பொருட்கள் தேங்கியுள்ளன. ஏற்கனவே காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது டிரைவர், கிளீனர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
- கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.
- அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் ஆகியது. கார் ஓட்டுநர் , சரக்கு வேன் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக வந்துள்ளார்.
- இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.
பல்லடம் :
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பினோய்(வயது 38).சரக்கு லாரி ஓட்டுநர். நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் வந்துள்ளார்.
லாரி பல்லடம் - செட்டிபாளையம் ரோடு, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுநர் பினோய் தூக்க அசதியில் லாரியை இயக்கியதால் ரோட்டோரமாக இருந்த இயற்கை அங்காடி கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு கடைகளின் முன் பகுதியில் இருந்த இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரெயில் மீது பலமாக மோதியது.
தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #TrainDerailed #TrivandrumRajdhani
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்