என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Case Registry"
- ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திரமாநில துணை முதல் மந்திரியாக இருப்பவர் நாராயணசாமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறு பேசியதாக ஆந்திர காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லு ரவி பேகம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஓஎஸ் ராஜசேகர் ரெட்டி முதல் மந்திரியாக இருந்தார். அவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
அவரது இறப்பிற்கு சோனியா காந்தியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தான் காரணம் என அவதூறாக பேசி இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளில் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
- வேணு,பாஸ்கர் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர்.
- தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமான மாக வைத்து ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர். இதில் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த வேணு ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கட்டியுள்ளார். மீதி தொகை யை கட்டுவதற்கு காலதாம தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஸ்கருக்கும், வேணுவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன் என்பவர் மூலமாக வேணு விடம் பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து வேணுவை கடத்தினர். வானூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தில் இருந்து கடத்தி, மாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வேணு, வாட்ஸ்அப் மூலமாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேணுவின் மனைவி கிளியனூர் போலீஸ் நிலையம் சென்றார். தனது கணவரை கடத்தி சென்று மாத்தூரில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டு மெனவும், வாட்ஸ்அப் தரவுகள் மூலம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிளியனூர், கோட்டக்குப்பம் போலீசார் மாத்தூருக்கு விரைந்து சென்று வேணுவை மீட்டனர். மீட்கப்பட்ட வேணு, தன்னை தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதி, நீல மேகம், செல்வம் ஆகியோர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக கிளியனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டி டம் வேணு மனு கொடுத்துள் ளார். இந்த சம்பவம் கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.
இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.
இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.
பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
- கோர்ட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- கையெழுத்து வாங்க முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வெங்கடேசன் இளநிலை கட்டளை நிறை வேற்றுபவராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் வழங்குவதற்காக கடலூர் தென்னம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்பவரிடம் நோட்டீசை கொடுத்து அசலில் கையெழுத்து வாங்க, முருகன் என்பவரை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.
அப்போது செல்வியின் கணவர் விஸ்வநாதன், வெங்க டேசனை வழி மறித்து அவரது மனைவி கையெழுத்து போட்டு கொடுத்த நகலை பிடுங்கி கொண்டதுடன் அவர் கையில் வைத்திருந்த நீதிமன்ற செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியினையும் பிடுங்கி மிரட்டி நீதிமன்ற பணியை செய்யவிடாமல் தடுத்து ள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் தூக்கணா ம்பாக்கம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததன் பேரில் விஸ்வநாதன் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கடந்த 23- ந் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50) இவர் ஏஜெண்டாக இருந்தார். இதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23- ந் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் தயாதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்