search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI officers"

    • பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.

    வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் மற்றும் இந்தியாவில் 557 நகரங்கள் என மொத்தம 571 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 4,750 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினார்கள்.

    கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையே நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த 1,563 பேருக்கு நேற்று மறுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வை 813 பேர் தான் எழுதினார்கள். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    நீட் தேர்வு முறைகேடு களில் ராஜஸ்தான், மராட்டி யம், குஜராத், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது விசா ரணையில் தெரிய வந்தது. குறிப்பாக பீகாரில் நிறைய பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவாக விசாரணை நடத்த சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டத் தின் 120பி (குற்ற சதி), 420 (மோசடி) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நீட் முறைகேடுகள் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதை அந்த மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களும் கைதாகி இருக்கிறார்கள்.

    இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு குழுக்களை சி.பி.ஐ. அமைத்து இருக்கிறது.

    அந்த சி.பி.ஐ. சிறப்பு குழுக்கள் குஜராத், பீகார் மாநிலங்களுக்கு விரைந்து உள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் முறைகேடு தொடர்பாக கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்தில் இருப்பவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலம் பெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அதுபோல பீகாரில் பாட்னா நகரில் நீட் தேர்வு முறைகேடு நடந்த இடங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்ட உள்ளனர். இந்த முறைகேடுகளில் நடந்துள்ள ஆள் மாறாட்டம், நம்பிக்கை மீறல், ஆதாரங்கள் அழிப்பு ஆகியவை தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.
    • தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா்.

    இவரை சி.பி.ஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் கடந்த 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து 2 நாட்களாக விசாரணை நடத்தினா்.

    இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.

    இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர் எனவும் தெரிய வந்தது.

    இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2 நாட்கள் தஞ்சை கிளை சிறையில் அடைக்குமாறும், வருகிற 20-ந்தேதி(திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்து மாறும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

    கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Mamata #MamatawelcomesSCorder
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த  நீதிபதிகள் ‘சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  

    அதேவேளையில், கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நிர்பந்தமான முறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அத்துமீறலாக நடந்துகொள்ள கூடாது. அவரை கைது செய்யவும் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


    சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் இம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தபோது போடப்பட்ட வழக்காகும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சுதிப்தா சென்-னை கைது செய்து வழக்கு போட்டோம். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, பணம் கட்டி ஏமாந்த  முதலீட்டாளர்களுக்கு 300 கோடி ரூபாயை பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது இவ்விவகாரத்தில் எங்களை குற்றவாளிகள்போல் சித்தரிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.

    நீதித்துறையின் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்வதற்காக இங்கு வந்தனர். ஆனால், அவரை கைது செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ள இந்த உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    இந்த நாட்டில் யாருமே உயர்வான எஜமானர்கள் இல்லை. ஜனநாயகம் மட்டுமே நம் நாட்டின் எஜமானர். நான் கொல்கத்தா கமிஷனருக்காக போராடவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்காகவும், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் தான் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்விவகாரத்தில் இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mamata #MamatawelcomesSCorder #democracy #bigbossofIndia

    ×