என் மலர்
நீங்கள் தேடியது "cbi"
- வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் திரும்பிவராத கடனாக அறிவிக்கப்பட்டது.
- 2020-ம் ஆண்டு சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது.
புதுடெல்லி:
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார்.
அவருடைய பதவிக்காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கினார்.
அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் திரும்பிவராத கடனாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணையில் குற்றம் உறுதியானதை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் சாந்தா கோச்சார் பணி நீக்கம் செய்யப்பட்டார். ரூ.3,250 கோடி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. குற்றவியல் சதி, ஊழல் தடுப்பு சட்ட விதிகள் கீழ் அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது.
இதற்கிடையே கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ. சி.ஐ. முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், முன்னாள் நிர்வாக இயக்குனருமான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து இருந்தது. கடந்த ஆண்டு இந்த மோசடி வழக்கில் சாந்தா கோச்சார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.
இந்நிலையில் ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் இன்று கைது செய்யப் பட்டார். மும்பையில் வைத்து அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் கைது செய்யப் பட்ட 3 தினங்களில் வேணு கோபால் தூத் கைதாகி உள்ளார். இதுவரை 3 பேர் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது.
- கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
- மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
அப்போது மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார். மேலும் உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று சி.பி.ஐ. திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
- வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கெனவே இந்த மனு கடந்த நவம்பர் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன். மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, சிபிஐ, எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கும் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
அப்போது குறுக்கிட்ட பொன். மாணிக்கவேல் தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரைக்கும் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
- 20 பேர் மீது கடந்த நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
- இந்த சோதனை நடவடிக்கை காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுடெல்லி :
காஷ்மீர் அரசின் நிதித்துறையில் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் உள்பட 20 பேர் மீது கடந்த நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக இடைத்தரகர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்தது.
உதம்பூர், ராஜபுரி, தோடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 37 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கை காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.45 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்ததாக குற்றச்சாட்டு
- இதற்கு முன் 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஒரு ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
புதுடெல்லி:
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என்.சுக்லா மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செயதுள்ளது. 2014-19 காலகட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக அவர் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.45 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.
இது அவருக்கு எதிரான இரண்டாவது ஊழல் வழக்கு ஆகும். இதற்கு முன் 2019ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஒரு ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது. எஸ்.என்.சுக்லா 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
- விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(28), ஹெரன்பால்(29), பாபு(27), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் மீது 2019 மே 21-ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
- ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
- ஏழை குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடிவடிக்கைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மணீஷ் அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கேவலமான அரசியல். சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பதிலளிப்பார்கள். இந்த நடவடிக்கை எங்கள் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கும். எங்கள் போராட்டம் வலுவடையும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
'ஒவ்வொரு ஏழை வீட்டில் இருந்தும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார். அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். ஆனால் இன்று அவரை கைது செய்துள்ளனர். நல்ல மனிதர்களையும் தேசபக்தர்களையும் கைது செய்கிறார்கள், அதே சமயம் அவர்களது நண்பர்கள் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்' என கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார்.
- மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
- மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
- சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.
- மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி இருந்தார்.
இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேட்டில் பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.
- கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- சிசோடியாவின் விசாரணைக் காவலை 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சிசோடியாவின் சிபிஐ விசாரணைக் காவல் முடிந்த நிலையில் அவரை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது சிசோடியா கோர்ட்டில் கூறும்போது, என்னை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் 9 முதல் 10 மணிநேரம் வரை அமர வைத்து, கேட்ட கேள்விகளையே திரும்ப, திரும்ப கேட்டனர். அது மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் இருந்தது, என குற்றம்சாட்டினார். சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணன், கோர்ட்டில் கூறும்போது, சிசோடியாவின் சி.பி.ஐ. காவலை நீட்டிக்க கோருவதற்கான விசயங்களை அவர்கள் நியாயப்படுத்தவில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சிசோடியாவின் விசாரணைக் காவலை 6ம் தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், கேட்ட கேள்விகளை சிசோடியாவிடம் திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என சிபிஐ-யிடம் நீதிபதி கேட்டுக்கொண்டார். சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை 10ம் தேதி நடைபெற உள்ளது.
- சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
பாட்னா:
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.
இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள் நிலங்களை லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு மாற்றி கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்
இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் தேஜஸ்வி யாதவ் கடந்த 4 - ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் இன்று பிற்பகல் பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.