என் மலர்
நீங்கள் தேடியது "cbi"
- 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
- திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் கடந்தாண்டு நவம்பர் 17-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது.
இதில் மொத்தமாக 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் அவ்வாறு நடைபெற வில்லை.
எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கான ஏல அறிவிப்பில் விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்ப ட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏல அறிவிப்பின் கீழ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
- நில மோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரைச் சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.
இந்நிலையில், நிலமோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே பிப்ரவரி 24-ம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி 3 சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4-வது முறையாக மார்ச் 25-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
- மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார்.
- டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலுபிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.
அப்போது ரெயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. இதைதொடர்ந்து லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் கடந்த 15-ந்தேதி ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ரெயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லல்லுபிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது "நாங் கள் எப்போதும் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால் தற்போது நாட்டின் நிலைமை என்னவென்றால் போராடுவது மிகவும் கடினமாகிவிட்டது. இதைத் எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஏற்கனவே 3 முறை சம்மனுக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இதற்கிடையே இதே வழக்கில் லல்லுவின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இதை தொடர்ந்து மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். அவரி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியிடம் சி.பி.ஐ.யும், மகள் மிசா பாரதியிடம் அமலாக்கத் துறையும் டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது. டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
- பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
பல்லடம் :
பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பிரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எங்களிடம் பல்லடத்தை சேர்ந்த சிவகுமார், அவரது அண்ணன் விஜயகுமார் மற்றும் விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவினா உள்ளிட்டோர் எங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறி, எங்களது சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த மோசடியால் எங்களது குடும்பங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துகின்றனர். மோசடி கும்பல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யாமல் உள்ளனர். இதனால் மோசடி கும்பலுக்கு போலீசார் துணை போவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நாட்டில் ஊழல் இல்லாமல் இருப்பது மிக முக்கியம்.
- அதற்காக சிபிஐ அமைப்பு பாடுபட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சி.பி.ஐ. தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழல் மேல் ஊழல் இருந்தது. பினாமி சொத்துகளுக்கு எதிராகவும் கறுப்பு பணத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய போரை தொடங்கினோம். ஊழல் மட்டுமில்லாமல் ஊழலுக்கான காரணங்களையும் ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம்.
நாட்டில் ஊழல் இல்லாமல் இருப்பது மிக முக்கியம். அதற்காக சிபிஐ அமைப்பு பாடுபட்டு வருகிறது. நீதியை நிலைநாட்டும் அமைப்பாக சிபிஐ இருந்து வருகிறது.
நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் பல ஆண்டுகளாக அரசில் ஒரு பகுதியாக உள்ளனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக் கூடாது.
சிபிஐ சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளது. நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால் சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை சிபிஐயின் பணியின் நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
- துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
- டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
புதுடெல்லி:
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்.
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுபான கொள்கையில் ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
- ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி :
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான சதி என்று ஆம் ஆத்மி கட்சி கூறி உள்ளது. இருப்பினும் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் எனவும் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சி போன்று கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும் குறி வைக்கப்பட்டதில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிதான், மக்களின் ஏழ்மையை ஒழித்து அவர்களுக்கு கல்வி புகட்டுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது. இந்த நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்று நினைத்துத்தான் எங்களை குறி வைக்கிறார்கள்.
சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். மணிஷ் சிசோடியா 14 செல்போன்களை அழித்து விட்டதாக அவர்கள் தவறாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. அவற்றில் 4 செல்போன்கள் அமலாக்கத்துறையிடமும், ஒன்று சி.பி.ஐ.யிடமும் உள்ளன. பிற செல்போன்கள் எல்லாம் செயல்பாட்டில் உள்ளன. அவை தன்னார்வலர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே, அப்படியென்றால் அந்த பணம் எங்கே போனது? 400-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றன. பணம் எங்கே? பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். கோவாவில் ஒவ்வொரு வியாபாரியிடமும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
டெல்லி சட்டசபையில் கடந்த மாதம் நான் ஊழல் பற்றி பேசியபோது, அடுத்த குறி நான்தான் என்று கூறினார்கள். இப்போது சம்மன் வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவால் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க.வும் பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுபான கொள்கை ஊழலின் பிதாமகன் கெஜ்ரிவால்தான். கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள்தானே மதுபான கொள்கை ஊழல் சதிக்கான கூட்டத்திற்கு தலைமை தாங்கினீர்கள்? பிறகு ஏன் உங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது? மதுபான வியாபாரிகளுக்கும், உங்களுக்கும் என்ன உறவு என்பதை நீங்கள் பொதுவெளியில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்கள் மதுபான கொள்கை சிறப்பானது என்றால் பிறகு ஏன் அது திரும்பப்பெறப்பட்டது?சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது கெஜ்ரிவாலுக்கு உதறல் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. உங்களுக்கு பயம் இல்லை என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகுங்கள். எல்லாம் தெளிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
- முதல்-மந்திரி கெஜ்ரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த கொள்கை மாற்றத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக 849 மதுபான கடைகளுக்கு புதிய மதுபான கொள்கை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல 100 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆம்ஆத்மி அரசு அறிவித்தது.
என்றாலும் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
புதிய மதுபான கொள்கை மூலம் முறைகேடாக சம்பாதித்த பணத்தில் 100 கோடி ரூபாயை கோவா தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து புதிய மதுபானக்கொள்கையை அறிவித்த ஆம்ஆத்மி அரசின் துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் டெல்லி ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் புதிய மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. விசாரணை அமைப்புகளை தூண்டிவிட்டு ஆம்ஆத்மியை முடக்க முயற்சி நடப்பதாக கெஜ்ரிவால் நேற்று பேட்டி அளித்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் விசாரணைக்கு ஆஜராவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி மற்றும் ஏராளமான ஆம்ஆத்மி மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர். காரில் டெல்லி சாலையில் அவர்கள் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றனர்.
சில இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் சி.பி.ஐ.யை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே முதல்-மந்திரி கெஜ்ரிவால் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.
திட்டமிட்டபடி 11 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நிலவும் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படுவாதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். கெஜ்ரிவால் வருகையை முன்னிட்டு சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
- 9 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களது கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசின் மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மதுபான வியாபாரிகளுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக கடந்த 2021-22-ம் ஆண்டு மதுபான கொள்கையை கெஜ்ரிவால் அரசு வெளியிட்டது.
அந்தக் கொள்கையில், மதுபான வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்குதல், குறிப்பாக உரிமக்கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், குறைத்தல், அனுமதியின்றி 'எல்-1' உரிமத்தை நீட்டித்தல் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்து, அதில் கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போதைய டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவின்படி, இந்த ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நடந்ததாக கூறப்படுகிற சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை விசாரிக்கிறது. சி.பி.ஐ. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த ஊழலில், மதுபான கொள்கையை உருவாக்கிய கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டெல்லி துணை முதல் மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியாவின் மீது சி.பி.ஐ.யின் சந்தேகப் பார்வை படிந்தது. மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்கள், அவரது அலுவலகம் என பல இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது. மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அவர் ஆஜரானபோது, பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி அதன் இறுதியில் கைது செய்தது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிஷ் சிசோடியா தனது துணை முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இப்போது இந்த மதுபான கொள்கை ஊழலின் உச்சக்கட்ட நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது சி.பி.ஐ.யின் பார்வை படிந்துள்ளது.
இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, சிபிஐ விசாரணை 9 மணி நேரம் நீடித்த நிலையில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்து தற்போது நிறைவடைந்ததையடுத்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், சிபிஐ அதிகாரிகள் என்னிடம் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். மதுபான கொள்கை முறைகேடு என்பது பொய்யான வழக்கு.
அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் மக்கள் எங்களுடன் உள்ளனர் என தெரிவித்தார்.
- சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
- கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புகார்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் கேரளாவில் தான் தங்கம் கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது.
இதனை தடுக்க சுங்க இலாகாவினரும், வருவாய் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தங்கம் கடத்தல் குறைந்தபாடில்லை. சுங்க இலாகா மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால் தான் தங்கம் கடத்தல் நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் சிக்கினர். அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கடத்தல் தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கூடுதல் நடவடிக்கையாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கோழிக்கோடு விமான நிலைய சூப்பிரண்டுகள் ஆஷா, கணபதி, இன்ஸ்பெக்டர்கள் யோகேஷ், யாசர் அராபத், சுதீர் குமார், நரேஷ் குலியா, மினிமோள் மற்றும் காவலர்கள் அசோகன், பிரான்சின் ஆகிய 9 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாக டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து பிரவீன் சூட் பதவியேற்க இருக்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்து வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவவர் டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தியாவில் சிபிஐ இயக்குனரை பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு நியமனம் செய்து வருகிறது. சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் ஆகும். இதனை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
- ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கு பிரதிபலனாக லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ரெயில்வே பணி நியமனத்தில் நடந்த இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.1 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. தேஜஸ்வி யாதவ், மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் ரெயில்வே பணிக்கான நிலம் பெற்ற ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.
பீகார், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் 9 இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதள எம்.எல்.ஏ. கிரண்தேவி, மேல்சபை பிரேம்சந்த் குப்தா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.