என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cellphone robbery"
- ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது.
- ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
ஈரோடு:
மேற்குவங்க மாநிலம், மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம்.
இதுகுறித்து, ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளனர்.
இதைக்கண்ட அருகில் இருந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களை தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ண மூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரகுமான். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 40 செல்போன்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து ரகுமான் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
விருகம்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). கருப்பட்டி வியாபாரி.
நேற்று முன்தினம் ஜெயபாண்டியன், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார். அங்கிருந்து திரும்பும் போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்டனர்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஜெயபாண்டியனின் சட்டைபையில் இருந்த செல்போனை, ஸ்கூட்டரின் பின்னால் இருந்தவர் திடீர் என பறித்தார். இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட ஜெயபாண்டியன், கொள்ளையர்கள் இருந்த ஸ்கூட்டரின் பின்பக்கம் உள்ள கைப்பிடியை பிடித்துக் கொண்டார். ஸ்கூட்டரை நிறுத்தி போனை மீட்க முயற்சித்தார்.
அப்போது கொள்ளையர்கள் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார்கள். இதனால் முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டினார்கள். இதனால் ஜெயபாண்டியன் ஸ்கூட்டருடன் சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
கை, கால் தரையில் உரசியதால் ரத்தம் கொட்டியது. எனவே ஸ்கூட்டரை நிறுத்தி கொள்ளையர்களை பிடிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. கைப்பிடி நழுவி ஜெயபாண்டியன் கீழே விழுந்தார். கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் ஜெயபாண்டியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த செல்போன் பறிப்பில் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் ஆழ்வார் திருநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல் (18). 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், இவர்களுடைய கூட்டாளியான விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் ஊழியர் சிவா (18) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, 2 மாணவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வழிப்பறி செய்வதற்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.#Cellphonerobbery
திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சித்ராவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.
அவனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பதும், ஓட்டி வந்து புதுவண்ணாரப்பேட்டையில் பருப்பு வியாபாரி ஒருவரிடம் திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிந்தது. #tamilnews
சென்னை:
மெரினா கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள். அவர்களிடம் இருந்து அதிக அளவில் செல்போன்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்த 2 சிறுவர்களை பிடித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “எங்களை அராபத் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன் திருடி வந்தால் பணம் தருவதாக கூறினார். அவரது ஆசை வார்த்தைக்கு மயங்கி செல்போன் கொள்ளையில் ஈடுபட்டோம்” என்றனர்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்த அராபத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #merinabeach
தரமணி சர்தார் பட்டேல் சாலையை சேர்ந்தவர் உமர் அகமது கான். அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 10-ந்தேதி தேனாம்பேட்டையில் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்காக மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் உமர் அகமது கானை கத்தி முனையில் மிரட்டி அவரிட மிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் உமர் அகமது கான் புகார் செய்தார். கொள்ளையர்கள் வந்த ஆட்டோவின் எண்ணையும் போலீசில் கொடுத்தார். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பறித்த ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
பரமக்குடி மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் குமரேசபாண்டியன் (வயது 65), செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் உறவினர் குமார் (46)என்பவருடன் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது காரில் வந்த கும்பல் கல்வீசி கடையை தாக்கியதாகவும், கடைக்குள் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்களை எடுத்துச் சென்றதாகவும் பரமக்குடி டவுன் போலீசில் குமரேசபாண்டியன் புகார் செய்தார்.
மேலும் அந்த கும்பல் கடையின் முன்பிருந்த தனது கார் கண்ணடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும், மொத்த சேத மதிப்பு ரூ.8 லட்சம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
குமரேசபாண்டியனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத் என்ற கணேசுக்கும் சுவர் தொடர்பாக விரோதம் இருந்துள்ளது.
இந்த முன்விரோதத்தில் கோகுல்நாத், சரவணன், சென்னை தலைமை செயலக கண்காணிப்பாளர் நளினி, மங்கையர்கரசி, நாகநாதன், சேதுராமன், ரத்தினவேல்பாண்டி, அனீஷ், சவுந்தரவள்ளி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்