search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chairs"

    • ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாத பாடுபடுவார்கள்.
    • பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாதபாடுபடுவார்கள்.

    கை செலவுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர், புடவைகள், பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டத்தை சேர்ப்பது கஷ்டம்.

    இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வேளச்சேரியில் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன், கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் நாற்காலிகளை தூக்கி குடையாக பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

    பலர் நாற்காலிகளை தலையில் வைத்தபடியே மெல்ல அங்கிருந்து நகர்ந்தார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த நாற்காலிகளையே தூக்கிச் சென்றதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

    ஆனால் உண்மையிலேயே கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு நாற்காலிகள் இலவசம் தான் என்றார் கவுன்சிலரும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளருமான வேளச்சேரி ஆனந்த்.

    தனது 176-வது வார்டுக்கு உட்பட்டவர்களை கூட்டத்துக்கு வருமாறும், கூட்டத்தில் புது பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கடைசியில் அந்த நாற்காலிகளை எடுத்து செல்லலாம் என்றும் கூறி இருந்தாராம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதையாவது கொடுப்பதை விட நாற்காலிகளை கொடுத்தால் வீடுகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதினேன். இதற்காக மொத்தமாக 2 ஆயிரம் நாற்காலிகளை கம்பெனியில் இருந்து ரூ.400 விலைக்கு வாங்கினேன்.

    இப்படி செய்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இடையில் எழுந்து சென்றால் நாற்காலிகளில் யாராவது அமர்ந்து விடுவார்கள். அப்புறம் நாற்காலி நமக்கு கிடைக்கிறது என்று கூட்டம் முடியும் வரை நாற்காலியை விட மாட்டார்கள். வெளியே செல்ல மாட்டார்கள் என்றார். கூட்டத்தை கவர எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?

    • தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே கரந்தையில் கருணாசாமி கோவில் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் குட்டை போல் வரண்டு காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்குதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு  தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.

    இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது:

    தஞ்சாவூரில் 40 குளங்கள் உள்ளது. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசுவாமி கோயில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும், கரந்தையில் ஜைன குளம், குஜிலியன் குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆய்வின் போது மாநகரா ட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டியாபுரம் அரசு ஊராட்சி பள்ளிக்கு தென்காசி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கான இருக்கைகள் மற்றும் மேசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். இதில் எம். பி. நிதியிலிருந்து வழங்கப்பட்ட இருக்கைகள் மற்றும் மேஜைகளை ராஜா எம்.எல்.ஏ. பள்ளிக்கு வழங்கினார்.

    இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச் செல்வி, பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி, கவுன் சிலர் அருள்சீலி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, துணைச் செயலாளர் வினுச்சக்கர வர்த்தி, எம்.எல்.எஸ். பிரேம்குமார், தங்கையா, சுப்பையா, ரவிச்சந்திரன், சங்கர், செல்வராஜ், பூசை பாண்டியன், மயில்வாகனன், நவமணிபாண்டியன், கோமதி ராஜ், பாலசுப்பிர மணியன், முத்தமிழ் செல்வ ன், அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணித் தங்கம் நன்றி கூறினார்.

    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம்,பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்ரமணியன் கலந்துகொண்டு பள்ளிக்கு சேர்கள் வழங்கிய சின்ராஜ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    • திருப்பூர் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம்- திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் தனது சொந்த செலவில் பாரதிபுரம் பள்ளிக்கு 25 சேர்களை வழங்கினார்.

    மங்கலம்:

    திருப்பூர் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம்- திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் தனது சொந்த செலவில் பாரதிபுரம் பள்ளிக்கு 25 சேர்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரமசிவம்,பள்ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்ரமணியன் கலந்துகொண்டு பள்ளிக்கு சேர்கள் வழங்கிய சின்ராஜ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.பி.நகர் சுரேஷ், இடுவாய் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் மௌனசாமி,முத்துவேல், ரவி, குமார், பிரபாகரன் , பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

    பூதலூரில் செயல்பட உள்ள கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பேராசிரியர் ராஜாவ ரதராஜா நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கு வதற்கு முன்பாக வகுப்பறைகள் தயார் நிலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாட பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

    துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்லூரிக்கு தேவையான தளவாட சாமான்கள் வாங்கி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.

    எம்.எல்.ஏ-வின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள், 16 மேஜைகள், புத்தகங்கள் வைக்க 5 அலமாரிகள், 5 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. கல்லூரிக்கு வந்த பொருள்களை கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா சரிபார்த்து பெற்று கல்லூரி வகுப்பறைக்குள் வைத்தார்.

    ×