search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chancellor"

    • முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சை.
    • ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா இன்று சென்னை கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார்.

    ஜே.பி. மோர்கன் சேஸ் & கோ- வின் நிர்வாக இயக்குனர் பிரபாகர் எட்வர்ட் இவ்விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். 

    மேலும், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு நவீன் ராகேஷ் அவர்களும், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கோகுல் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இடைக்கால வேந்தராக இருந்த கோமதி அம்மாள் அவர்கள் தன்னிடம் இருந்த செங்கோலை புதிய வேந்தரிடம் வழங்கினார்.

    தொடர்ந்து, ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறையாக கையொப்பமிடுதலைத் தொடர்ந்து, வேந்தராக தனது உரையை வழங்கினார். 

    இவ்வுரையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கான தனது தொலைநோக்கு பார்வையினை கோடிட்டுக் காட்டினார்.

    மேலும், அவர் உயிர் காக்கும் நலத்திட்டங்களான 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையையும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் புதிய வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

    பேராசிரியர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் இவ்விழாவிற்கான நன்றியுரையை வழங்கினார்.

    • இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.
    • 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சிறப்பான கல்வி, விளையாட்டுகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தாளாளராக இருந்து வரும் வழக்கறிஞர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கடின உழைப்பு, இளம் மனங்களின் அறிவின் எல்லைகளை விரிவுபடுத்த உதவியது, கற்றல் முறைகளைப் புதுமைப்படுத்த கையாண்ட உத்தி, கல்வித் துறையில் புதிய மைல் கற்களை அடைய உதவிய புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்காக சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி டெல்லி சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிமிற்கு நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கீழக்கரை முன்னாள் நகர்மன்ற தலைவரும், கீழக்கரை தி.மு.க. செயலாள ருமான பஷீர் அகமது, தி.மு.க.மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹூசைன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை அ.தி.மு.க. அவைத்தலைவர் சரவண பாலாஜி, கவுன்சிலர்கள் முகம்மது காசிம் மரைக்காயர், எஸ்.கே.வி.சுகைபு, நசிருதீன், மீரான் அலி, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முகமது முஸ்தபா, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தன லட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரி யர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வியா ளர்கள், சமூக நல அமைப்பி னர் உள்பட 100-க்கும் அதிக மானோர் பொன்னாடை அணிவித்து மென்மேலும் பல்வேறு சாதனை விருதுகளை பெற வாழ்த்துக்கள் தெரிவித்த னர்.

    • முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே  கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆளுநர் ஆரிப் கையெழுத்து போடவில்லை.

    இதையடுத்து ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து மாற்றி, அந்த பதவியில் பிரபல கல்வியாளர்களை நியமிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒப்புதலுக்காக வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    எனினும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வராததால், ஆளுநர் உடனடியாக இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பிரகடனம் செய்வது சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புதிய அதிபராக அங்குள்ள தியான மைய இயக்குனர் ஆக பணியாற்றிய சாம்சன் நியமித்து கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக சாம்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இதில் பல்வேறு பகுதியைச் சார்ந்த பங்குத் தந்தையர்கள் கலந்துகொண்டனர்.மாறுதலில் செல்லும் பாக்கியசாமி, பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குநர் ஆல்பர்ட், உதவி பங்குத் தந்தைகள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய அதிபர் சாம்சனை பூண்டிமாதா மக்கள் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    ×