search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaturthi Festival"

    • காரைக்குடியில் லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி போக்குவரத்து நகரில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிசேகம், ஆரா தனை நடைபெற்றது.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ஒன்றிய கவுன்சி லர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை சாக் கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட மகளிரணி தலைவி சித்திராதேவி, நகர மகளி ரணி செயலாளர் சுலோச் சனா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவி மீனாள், தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் மகேந்திரன், நாகராஜன், வட்ட செய லாளர் சீனிவாசன், கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் லட்சுமி விநாயகரின் வீதி உலா நடைபெற்றது.

    • சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
    • ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டன.

    திருப்பூர்:

    விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் ராஜவேல், வசந்தகுமாா், அம்பிகா, சக்திவேல், சக்திவேல், தினகரன், காவல் உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    விநாயகா் சதுா்த்தி விழாவில் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்த இடங்களை தவிர வேறு இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், ஒலிபெருக்கி வைக்க வேண்டும். காலை, மாலை என 2 மணி நேரம் அனுமதித்த சப்தத்துடன் உபயோகிக்க வேண்டும். சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போதும், ஊா்வலம் செல்லும் போதும் வாணவேடிக்கை, பட்டாசுகள் உபயோகிக்கக்கூடாது.

    களிமண், காகிதக்கூழ் ஆகியவை கொண்டு தயாரித்த சிலைகளையே அமைக்க வேண்டும். சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளா், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியத்தினரிடம் தடையின்மைச் சான்று பெறுதல், சாா்ஆட்சியரிடம் உரிய படிவத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறுதல், ஊா்வல ஒருங்கிணைப்பாளா்கள், ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.இந்த கூட்டத்தில், இந்து முன்னணியினா் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினா், காவல் துறையினா் பங்கேற்றனா்.

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மதுரை-மடப்புரம் விலக்கில் உள்ள விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதில் கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (4-ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (4-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 9-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (6ந்-தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை மறுநாள் வியாழக்கிழமை (6-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது. பொது வாக விநாயகருக்கு அரு கம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய் களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை (9ந்தேதி) சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதத்துக்கான சங்கடஹர சதுர்த்தி நாளை(9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
    • சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    மதுரை

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    சதுர்த்தி ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
    • அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.மேலும் வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநா யகர், வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பால விநாயகர், விநாயகர் கோவில்களில் ஹோமம், யாகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அரியலூர்:

    மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உட்கோட்டை, குருவாலப்பர்கோவில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    செங்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

    அங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விநாயர் சிலைகள் தயார் செய்து வருகிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் விஜயவாடா, திருப்பதி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ் உள்ளிட்ட மூல பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் சிலைகளை 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு தயாரித்து வருகின்றனர்.

    இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ. ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இங்கு தயார் செய்யப்படும் சிலைகள் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பபடுகிறது. இது குறித்து சிலைகள் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழாக்கள் நடத்தப்படாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தது. இதனால் பெரும் நஷ்டம் மடைந்திருந்தோம்.

    இந்தாண்டு வழக்கம் போல விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் தற்போது அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளன.

    நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரையக் கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரசி, கிழங்குமாவு, களி மண் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் யாருக்கும் பாதிப்பில்லா வண்ணம் விநாயகர் சிலைகள் தயாரிக்க பட்டுள்ளது.

    தற்போது எங்களிடம் மூன்றுமுக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயண விநாயகர், நந்திகேஷ்வர விநாயகர், கற்பக விநாயகர், திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் 30 மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம்.

    அவைகள் செங்கோட்டை மட்டுமல்லாது கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சிலைகள் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப விலையில் அமைந்துள்ளதால் அதிகளவு மக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இவற்றை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் யோகேஷ்குமார், மாநில துணை பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.

    மாநகர தலைவர் துரைப்பாண்டி, மாநகர இளைஞரணி தலைவர் பிரபு ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் மணிகண்டன், மாநகர மாணவரணி தலைவர் அஜய் சூர்யா மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாநகர பொது செயலாளர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    சுதந்திர தினத்தையொட்டி இந்திய அரசும், தமிழக அரசும் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்ற வேண்டும். சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×