என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chicken Biryani"
- வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
- வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.
- 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்த சமூக சேவகர் ஐ.ஜி.வீரராகு. இவரது மனைவி பிரபாதேவி (36). இவர், பா.ஜனதா பிரமுகரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவரும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40), பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த கோமதி (44) ஆகியோரும் புதுவை 100-அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
அப்போது சிக்கன் பிரியாணியில் இறந்துபோன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதுபற்றி அவர்கள். ஓட்டல் மேனேஜர் மற்றும் அதன் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக பிரபாதேவியின் சகோதரர் பிரகாஷ் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரபாதேவி பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்து, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, தரமற்ற பிரியாணியை வழங்கி வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.
பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.
கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
மிச்சாங் புயல் மழை காரணமாக சென்னையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.
காய்கறி வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது. மழையை காரணம் காட்டி பொருட்கள் எடுத்து வரும் சரக்கு வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்து வரும் லாரிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இருந்து சில்லரை வியாபாரத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
வழக்கமாக வாடகை கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் இடத்தில் 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அது போல முட்டை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இத்தகைய காரணங்களால் சென்னையில் சில இடங்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் பால் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அசைவ உணவு கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.240-க்கு விற்பனையாகும் சிக்கன் பிரியாணி புயல் மழை பாதிப்பால் பொருட்கள் கிடைக்காததால் பார்சலுக்கு ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிக்கன் பிரியாணி விலை சராசரியாக 60 ரூபாய் உயர்ந்துள்ளது.
- மாணவ-மாணவிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டன
- அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சி அண்ணாநகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் கணினிகளை வழங்கினார்.
அத்துடன் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு என அறுசுவை உணவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஏழை எளிய மக்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். தி.மு.க. குந்தா ஒன்றிய துணை செயலாளர் போர்த்தி ஜெகதிஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
- போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.
கடலூர் :
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.
இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.
இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.
ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.
தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.
- பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர்.
- சுல்தான்பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை 45 அடி சாலையில் பிரபலமான பிரியாணி கடை உள்ளது.
இங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த மைக்கேல் சிக்கன் பிரியாணி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது, அதில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப் கம்பி இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு வந்து உரிமையாளரிடம் முறையிட்டார். கடை உரிமையாளரிடம் அவர் முறையிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் மைக்கேல் கூறுகையில், பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். பின்னர் சாதாரணமாக மன்னித்து விடுங்கள் என கூறுகின்றனர்.
கம்பி வயிற்றுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரியாணி கடை பொறுப்பேற்குமா? பிரியாணி சாப்பிடும்போது என்ன உள்ளது? என பார்த்து சாப்பிடுங்கள்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிப்பேன் என்றார். ஏற்கனவே சுல்தான் பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
- முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
- அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
புதுச்சேரி:
முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அப்பள்ளியில் பயிலும் 500 மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிக்கன் பிரியாணி விருந்து தயார் செய்யப்பட்டது. அதனை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
சிக்கன் - 1/2 கிலோ,
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
(பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம்பழம் - 1,
உப்பு - தேவைக்கு,
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.
பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.
இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 8
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்