என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "child labor"
- விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
- அதிகாரிகள் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காய்கறி மார்க்கெட், காந்தி ரோடு, மண்டி தெரு, பழைய புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி பாத்திர கடை மளிகை கடை நோட்டு புத்தக கடை உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் குபேரன் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்தனர்.
பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வியாபாரிகளிடம் வழங்கினர்.
இதில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு சீனிவாசன் பரமசிவம், துணை தாசில்தார் அய்யப்பன் ஆர்.ஐ. நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை.
- 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும்.
நெல்லை:
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லா நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இன்று விழிப்புணர்வு வாகன பேரணி நெல்லை அறிவியல் மையத்தில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை தேசிய குழந்தைகள், உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மிகவும் அவசியம். 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக 6 முதல் 14 வயது உடையோருக்கு கல்வி என்பது கட்டாயம்.
குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2012-ம் ஆண்டே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தான் அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் தற்போது அதிகளவிலான புகார்கள் வருகிறது. குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் 3 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்கள் இடையே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார், சைல்டு லைன் 1,098 இயக்குனர் ஞானதினகரன், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், இன்ஸ்பெக்டர்கள் மீராள்பானு, ஷோபா ஜென்சி, ஆன்ட்ரீஜெகதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
- புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.
தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.
அட்டவாடி:
திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று குழந்தைகள் தொழிலாளியாக பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பது குறித்தும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டும் கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. அப்போது குழந்தை தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு கல்வி வழங்க துணை புரிவோம். குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்க பாடுபடுவோம் என கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் உறுதிமொழியேற்றனர். பின்னர் அங்கிருந்த போர்டில் கையெழுத்திட்டு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது வடக்கு பிரதட்சணம் ரோடு, மேற்கு பிரதட்சணம் ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வழியாக கரூர் பஸ் நிலையத்தை அடைந்தது.
இதற்கிடையே முக்கிய வீதியிலுள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இங்கு குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்கிற ஒட்டு வில்லைகளை ஒட்டினர். பொதுமக்களிடையே துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் பேண்டு வாத்திய இசை கருவிகளை முழங்கியபடியே ஊர்வலத்தில் வீறுநடை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களின் வியர்வை துளிகள், பாரத தாயின் கண்ணீர் துளிகள், குழந்தை தொழிலாளர்களை பள்ளிக்கு படையெடுக்க வைப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடியே மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலமானது கரூர் பஸ் நிலையத்தினை கடந்து ஜவகர்பஜார் வழியாக சென்று சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அனு சரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றால் சட்டங்களை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனையும், 2-ம் முறையாக மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது பெற்றோர்களுக்கும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களைக்கொண்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்