search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child laborers"

    • 6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.
    • கோழிப்பண்ணை நிர்வாகத்தினரை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக திருப்பூர் சைல்டு லைனுக்கு புகார் வந்தது.இதனையடுத்து சைல்டு லைன் மற்றும் குண்டடம் போலீசார், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்வதும், குடும்பத்தை சேர்ந்த 13 முதல், 17 வயது உடைய 6 பேர் பள்ளிக்கு செல்லாமல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.வேலைக்கு அனுப்ப கூடாது என்றும், பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தி பெற்றோரிடம் எழுதி வாங்கியும் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். மேலும் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மீது தொழிலாளர் நல அதிகாரிகள் மற்றும் குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அவினாசி தன்னார்வ அமைப்பினருக்கு புகார் வந்தன. புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனுக்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் போலீசார் 2 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்கள் 2 பேரும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையம் தனியார் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது வருவாய்த்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

    • அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர்.
    • 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் பெரிய கடைவீதி செட்டி வீதியில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்கள், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களை மீட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், ஓட்டல் மேலாளர் முகமத் ஹரீஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் உறுதிமொழி ஏற்றனர்
    • அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் போலீசார் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா,குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் "குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி" ஏற்கப்பட்டது.

    • வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி எம்.வி.எஸ். நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின், குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தி இருப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட தொழிலாளர் நல துறை உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்களை திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்திய அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம், முறையாக கட்டப்படாததால் கட்டடத்தின் சுவர்கள் சாய்ந்து வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

    • மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா்.
    • 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    திருப்பூா் :

    திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பொறுப்பு க.செந்தில்குமரன் தலைமையில் வருவாய்த் துறையினா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா ளா்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    மேலும், குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகளின் உரிமையா ளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • 18 வயது நிறைவடைந்தபின் குழந்தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
    • 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

     திருப்பூர்:

    குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித தொழிலிலும் அமர்த்துவது குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்ந்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அதன்படி திருப்பூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளில் 2 குழந்தை தொழிலாளர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என விதிக்கப்பட்ட அபராத தொகை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மறுவாழ்வு கணக்கில் செலுத்தப்பட்டது.

    குழந்தை தொழிலாளியாக மீட்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காக அரசின் பங்குத்தொகையாக ரூ.15 ஆயிரம், பெற்று குழந்தைகள் மறுவாழ்வு கணக்கில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரையில் 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டித்தொகை கிடைக்கும் வகையில் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு, குழந்தையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தபின் குழந்–தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்–கில் செலுத்தப்படும்.

    அவ்வாறு 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீட்கப்பட்டு அந்த சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு அதற்கான ஆணையை கலெக்டர் வினீத் சிறுவனிடம் வழங்கினார். இதுபோல் மீட்கப்பட்ட மற்றொரு 18 வயது பூர்த்தியடைந்த சிறுவனுக்கு ரூ.47 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் திடீர் ஆய்வு
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது 1986 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் மேலும் நீதிமன்றத்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரையின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டன.

    வளரிளம் தொழி லாளர்க ளையும் மீட்கப்பட்டன. இதில் மூன்று உரிமையா ளர்களின் மீதும் நீதிம ன்றத்தால் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க ப்பட்டு ள்ளதாக திருவண்ணா மலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்து ள்ளார்.

    ×