என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chromepet"

    • மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.
    • தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார். மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாற்று திறனாளி 2 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொழில் கடன் உதவி, குடியிருப்பு வீட்டிற்கான கிரையபத்திரம் பெயர் மாற்றம், பெயர் திருத்துதல், சொத்து வரி உட்பட 100 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குரோம்பேட்டையில் ரெயில் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தினேஷ்செல்வம். இவர் தாம்பரத்தில் தங்கி இருந்து சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டை- பல்லாவரம் இடையே தண்டவாளத்தில் தினேஷ்செல்வம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றினர். தினேஷ்செல்வம் ரெயில் மோதி இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    குரோம்பேட்டையில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை நியூ காலனி, 12-வது தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர் பிருந்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் மர்ம வாலிபர் வீட்டின் கதவை தட்டினான். பிருந்தா கதவை திறந்ததும் அவன் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்தான். பின்னர் பிருந்தாவை கட்டிபோட்டு வாயில் துணியை திணித்தான்.

    மேலும் பிருந்தா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

    சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மீட்டனர்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    ×