என் மலர்
நீங்கள் தேடியது "coal mine"
- நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
- சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
- 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.
நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
- திடீரென வெள்ளம் புகுந்ததால் தொழிலாளர்களால் தப்பிக்க முடியவில்லை.
- மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அசாம் மாநிலம் திமா ஹசாயோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திமா ஹசாயோ மாவட்த்தில் உள்ள உம்ராங்சோவில் உள்ள 3 கிலோ பகுதியில் உள்ள அசாம் நிலக்ககரி குவாரியில் நடந்துள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள உம்ராங்ஷுவிலிருந்து துயரமான செய்தி வந்துள்ளது. சரியான எண்ணிக்கை மற்றும் நிலை இன்னும் தெரியவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் எனது சக ஊழியர் கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமா ஹசாயோ எஸ்.பி. மயங்க் ஜா "சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். திடீரென வெள்ளம் வந்ததால் தொழிலாளர்கள் உடனடியாக சுரங்கத்தில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்படடது என நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட 13கிராம மக்கள் நிலக்கரி கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
- நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளியம்பாளையம், புலவனூர், முத்துராண்டி பாளையம், வாய்ப்பாடி புதூர், முருகம்பாளையம், வேலாயுதம்பாளையம், பனியம்பள்ளி, கொமாரபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம் பாளையம், மாடுகட்டிபாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் தனியார் நிறுவனம் பல நபர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி உள்ளது. எங்கள் பகுதி ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பூமி ஆகும். இந்த பகுதியில் நிலக்கரி குடோன் அமைக்க முயற்சி நடத்துவதாக நாங்கள் அறிகிறோம்.
இங்கு மேற்படி நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் நிலக்கரி குடோன் மற்றும் வேறு எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை எடுக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த இச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து தேங்காய் நார் தொழிற்சாலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
மேகாலயாவின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த மாதம் 13-ந் தேதி திடீரென தண்ணீர் புகுந்ததால், 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகளை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, சுரங்கத்தின் அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் வெள்ள நீர் சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரின் உடலை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் இன்று மீட்டுள்ளனர். ரிமோட் மூலம் இயங்கக்கூடிய ஆர்ஓவி எனும் நீர்மூழ்கி உபகரணம் மூலம் தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், எலிப்பொந்து என்று அழைக்கப்படும் சுரங்கத்தின் முகப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #MeghalayaCoalMine #NavyDivers

இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். #MeghalayaCoalmine
சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்திருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 18 பேரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களின் நிலை என்ன? என்பதும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaCoalMine #CoalMineCollapse