search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut sapling"

    • கீழடி ஊராட்சியில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடிஊராட்சியில் பாண்டிய மண்டல பேரமைப்பு மற்றும் வைகை உழவர் பிரிவு பசுமை பூமி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு விதைதிருவிழா நடந்தது. சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி டாக்டர் சரோஜினி தொடங்கி வைத்தார். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கிட சுப்பிரமணியன் வரவேற்றார். அருட்தந்தை ஜெகத்கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தாளான்மை ஆசிரியர் பாமயன் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு பற்றியும் பாரம்பரிய நெல் விதைகளை பற்றி பேசினார்கள்.

    விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரான உணவுகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகள், வேளாண் பொருள்கள், இயற்கையான மருத்துவ குணமுடைய தாவரங்கள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடந்தது. முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.

    அட்மா திட்டத்தின் கீழ் தனிக்கோ ட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடை களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி மூலம் நடத்தப்பட்டது.

    இதில் 60 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சத்து மாத்திரை மற்றும் உன்னி நீக்க மருந்துகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேளாண்மை அலுவலர் இளங்கோ , துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, வேளாண்மை உதவி அலுவலர் ராமு ஆகியோர் விவசாயிகளின் திட்ட வாரியான தேவைகளை பதிவு செய்து தென்னங்கன்றுகளை வழங்கினர்.

    அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு, அய்யா மணி ஆகியோர் குடல் புழு நீக்க கால்நடை மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

    மேலும் 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் கலையரசன் மூலம் பதிவு செய்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

    பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் முன்னுரிமைக்கு பதிவு செய்யாத விவசாயிகளை உழவர் செயலியில் பதிவு செய்து உதவினார்.

    அட்மா திட்ட அலுவலர்கள் விவசாயிக ளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினர்.

    வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதன் மானிய விகிதம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    இதில் முன்னோடி விவசாயிகள் அண்ணா துரை, ஜெயமணி , சக்திவேல், அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
    • பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள்.

    சீர்காழி:

    சீர்காழி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

    விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், பஞ்சு குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், முத்து குபேரன், செல்வமுத்துக்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் விவசாய கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு தென்ன ங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இயமையனாதன், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 விவசாய குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டியன், வேளாண்மைத்துறை தரக்கட்ட ப்பட்டு உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலர் சுவாதிகா, உதவி வேளாண் அலுவலர் சுகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.

    ×