என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Jail"

    • நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா பெயரிலும் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றி யவர் நடேசன் (67).

    இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

    இதில் நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரி யரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடேசன் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னி லையில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.

    அதில் அரசு பணியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் கல்லாங் கரடு ஸ்ரீராம் நகர், 8-வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (25). கூலி தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக செல்வகுமாரை உறவினர்கள் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, கண்ணையன் ஆகிய 8 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

    இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஈரோடு முதலாம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணையன் என்பவர் இறந்து விட்டார்.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதில் கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 2 ஆண்டு, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 3 ஆண்டு என மொத்தம் 5 ஆண்டுகள் கூடுதலாக ஜோதிமணி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.

    இதனையடுத்து அவர்கள் 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
    • இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கள்ளியூர் டேங்க் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 51). விவசாயி. இவருடைய மனைவி கமலா. இவர்க ளுக்கு ஒரு மகன் உள்ளார். கமலா குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்க ளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் தனிமையில் இருந்து வந்த தர்மன் கீழ்வாணி மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த விஜய சாந்தி (வயது 24) என்பவரை 2–-வது திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. விஜய சாந்தி தொடர்ந்து பகல் மற்றும் நள்ளிரவு நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கடந்த 30.01.2019 அன்று அதிகாலை கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற் பட்டது. அப்போது விஜய சாந்தியை மண்வெட்டி யால் தர்மன் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த விஜயசாந்தி சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். பின்னர் தர்மன் ஆப்ப க்கூடல் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரிடம் சரண் அடைந்தார்.

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஆப்பக்கூடல் போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு பவானி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி இருந்தார்.

    இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட தர்மன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிதடி, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்ற கைதியிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஆயுள் தண்டனை கைதியான செந்தில் என்பவர் தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    செந்தில் கோவை கணபதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவர்.

    செந்திலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. செந்திலுக்கு மத்திய சிறையின் மெயின் வாயிலுக்கு வெளியில் சுத்தம் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது சிலர் வெளியே இருந்து வரும்போது அவரிடம் கஞ்சாவை கொடுப்பதும், அதனை அவர் ஆசனவாயிலில் வைத்து சிறைக்குள் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

    சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாக தலையால் மோதிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து செந்திலை ஜெயில் அதிகாரிகள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்திலின் முகத்தில் இரு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. இதற்காக முகத்தில் 16 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜன், செந்தில் மற்றும் பார்வையாளர்கள் போல் வந்து அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பிரபுராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரபுராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்தவர் யேசுதாஸ்(வயது33).

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட்டு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.

    இந்த நிலையில் யேசுதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி யேசுதாசுக்கு ஜெயிலில் உள்ள தொழிற்சாலையில் பணி ஒதுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

    கடந்த 27-ந்தேதி யேசுதாஸ், தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மதியம் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    யேசுதாஸ் மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

    இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயில் கைதி மரணம் அடைந்துள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோவை மத்திய ஜெயில் துணை வார்டன் மனோரஞ்சிதம், உதவி வார்டன் விஜயராஜ், தலைமை காவலர்கள் பாபுராஜ், தினேஷ் ஆகிய 4 பேரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • கணேசன் அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.
    • கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் தசரா பட்டியை சேர்ந்த கணேசன் (46) என்பவர் உடுமலையில் நடந்த அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.

    இன்று காலை அவர் அடைக்கப்பட்டு இருந்த ஜெயில் அறையில் அவர் மயங்கி கிடந்தார். சிறைகாவலர்கள் இதுகுறித்து கோவை மத்திய சிறை ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார்.
    • அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    நம்பியூர்:

    ஈேராடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (26). இவர் நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டம்பா–ளையம் மற்றும் லாகம்பாளையம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் துலுக்கன்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பித்தார். மேலும் இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத்தை சந்தித்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை கொட்டக்காட்டுபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அருண்பிரசாத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண்பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    இவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் இன்னும் நிறைவடையாத நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கி உள்ளார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஊட்டி:

    ஊட்டி அருகே கோடப்பமந்து அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி ராஜலட்சுமி(35). இவர்களது மகள் உஷாராணி(11). இவள் ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் ராஜலட்சுமி சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த ஜெகநாதன், காந்தலில் தனியாக வசிக்க தொடங்கினார். இதனால் ராஜலட்சுமி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    இதற்கிடையில் ராஜலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இருப்பினும் ராஜலட்சுமிக்கு மேலும் சிலருடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது மகள் உஷாராணி ஊஞ்சல் விளையாடியபோது, கயிறு கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்து விட்டதாக ராஜலட்சுமி அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதார். மேலும் தனது மகளின் உடலை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரே தூக்கி சென்றார். அப்போது டாக்டர்கள் உஷாராணி உயிரிழந்ததை உறுதி செய்து, பிரேத பரிசோதனை செய்ய உடலை அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ஜெகநாதனின் சகோதரர் குமார் உஷாராணியின் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி நகர மத்திய போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது மகளை ராஜலட்சுமியே துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும், அதனை மூடி மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
    கோவை:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கொலை வழக்கு ஒன்றில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ராமசாமிக்கு மாரடைப்பு ஏற்பட் டதாக கூறி அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனையின் போது பின்தலை உள்பட சில இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார் சிறைக்கு சென்று ராமசாமியுடன் தங்கி இருந்த சக கைதிகளான ரமேஷ்(30), சுப்பிரமணி(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறையில் சக கைதி ரமேஷ் என்பவருக்கும் ராமசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே சிறை ஊழியரை தாக்கியதாக புகார் உள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக ராமசாமியை ரமேஷ் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கைதி மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை கிடைத்ததும் அதை வைத்து மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை தருவார். அந்த அறிக்கையில் அடிப்படையில் தான் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படுமா? என்பதை கூற முடியும் என்றனர்.
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். பனியன் தொழிலாளி.

    இவர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருந்ததாவது-

    திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை அடுத்துள்ள வாவிவாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (52). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக திருப்பூர் சோளிபாளையம் பகுதியில் வைத்து என்னிடம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 8 லட்சம் பெற்றார்.

    ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்தார்.இது குறித்து ராஜேஸ்வரனிடம் நேரில் சென்று கேட்ட போது மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாய் அருண் (48), கார்த்திகேயன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு தலைமை செயலாளர் மிகவும் பழக்கம் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.

    ஆனால் இருவரும் பணத்தை பெற்றுக் கொண்டு என்னிடம் மோசடி செய்து விட்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    புகார் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராஜேஸ்வரன், சாய் அருண், கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ராஜேஸ்வரன், சாய் அருண் ஆகியோரை கைது செய்தனர். கார்த்திகேயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் இருந்து இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    கோவை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக சிறைகளில் 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்து 2 கட்டமாக 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இன்று 3-ம் கட்டமாக 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுபற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் கோவை சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வந்தனர். காலை 7 மணிக்கு மேல் 40 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    ×