என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore"

    • பாதிக்கப்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம்.
    • அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கிராமம்தோறும் சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் கால்களில் முதலில் வீக்கம் ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து, உடலில் கொப்பளங்கள் உண்டாகின்றன. உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைவதுடன், தீவனம் உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது. நோய் பாதிப்பு காரணமாக படுக்க முடியாததால், பல நாட்களுக்கு நின்றவாறே இருக்கின்றன. மற்ற மாடுகளுக்கு நோய் பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம்.

    கடந்த சில வாரங்களாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ராமநாதபுரம், தேவ ம்பாடி, சேர்வைக்கா ரன்பாளையம், மண்ணூர், கானல்புதூர், ஆர்.பொன்னாபுரம், காந்தி ஆசிரமம், கோவிந்தனூர், புரவிப்பாளையம், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 23 மாடுகள் உயிரிழந்துள்ளன.

    சொந்த நிலத்திலேயே புதைக்கும் வேதனையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறவை மாடுகளை காப்பாற்ற, கால்நடைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது.

    கோவை

    கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக லேசர் ஷோ சுங்கம் வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் நேற்று முதல் மாலை நேரத்தில் காட்சிப் படுத்தப்படுகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்த லேசர் ஷோவை அதிகளவிலான மக்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படங்கள், வீடியோ எடுத்து பார்த்து ரசித்தனர்.

    வரும் 8-ந் தேதி வரை லேசர் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் பீளமேட்டில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி நடக்கிறது.

    மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஒருமை பயணம் என்ற பெயரில், பல்வேறு மதம் சார்ந்த இடங்களுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இறுதியாக போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (5-ந்தேதி) ரேஸ்கோர்சில் இருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்களின் அணிவகுப்பு ஊர்வலமும், சுங்கம் வாலாங்குளம் கரையில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை உணவு, இசை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    சனிக்கிழமை (7-ந் தேதி) ஆர்ட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் உள்ளூர் ஓவியர்களின் வரைபடக் கண்காட்சி, கலந்துரையாடல் நிகழ்வு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு கொடிசியா அரங்கில் செட்டிநாடு திருவிழா நிகழ்ச்சியும், தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் கண்காட்சியும் நடக்கிறது.இறுதி நாளான ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) கோவை நேரு ஸ்டேடியம் அருகே மாரத்தான் போட்டியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.   

    • சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே. ஜி. வலசு, பெருமாள்மலையை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகள் தீபா.

    கடந்த 2021 ஜூன் 26-ந் தேதி தனது தோட்டத்தில் மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் கூலி தொழிலாளி முருங்கத் தொழுவை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோருடன் கருப்பண்ணன் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது வந்த ஒரு வாலிபர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு முன் மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறி 4 பேருக்கும் மாத்திரை கொடுத்தார்.

    மாத்திரை சாப்பிட்ட 4 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசார ணையில் கருப்பண்ணன் நிலத்தை குத்தகைக்கு எடுத்த சென்னி–மலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவருக்கும் கருப்பண்ணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

    கருப்பண்ணன், கல்யாண சுந்தரத்துக்கு ரூ.14 லட்சம் வரை பணம் கொடுத்து ள்ளார். அந்த பணத்தை கருப்பண்ணன் கல்யாண சுந்தரத்திடம் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம் அடைந்த கல்யாண சுந்தரம் கருப்பண்ணனை கொலை செய்யும் நோக்கத்தில் தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை சென்னிமலை எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் போத்தீஸ் குமார்(20)என்பவர் மூலம் கொடுத்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    நீதிபதி மாலதி நேற்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதில் முக்கிய குற்றவாளி யான விவசாயி கல்யாண சுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இதேப்போல் மற்றொரு குற்றவாளியான போத்தீஸ்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.
    • இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைஅருகே உள்ள சூலூரை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கணக்கு பாடம்

    மாணவி நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனையடுத்து மாணவியிடம் கணித ஆசிரியை பெற்றோர் அழைத்து வரும்படி கூறினார்.

    சம்பவத்தன்று மாணவியி ன் தாய் பள்ளிக்கு சென்றார். ஆசிரியையை சந்தித்து பேசினார்.

    பின்னர் பள்ளி விடும் நேரம் என்பதால் தனது மகளை அழைத்து செல்லலாம் என்பதற்காக பள்ளி அருகே உள்ள பெருமாள கோவிலில் காத்திருந்தார்.

    சாணிப்பவுடர்

    பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியின் வாய் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனை பார்த்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் என்ன வென்று கேட்டார். அப்போது மாணவி கணக்கு பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பள்ளியில் வைத்து மஞ்சள் சாணிப்பவுடரை கரைத்து குடித்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து மாணவியை அவரது தாய் சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார்.
    • தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது 33). கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    புதுமாப்பிள்ளை

    கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    நீண்டநேரமாகியும் அருள்குமார் வீடு திரும்பாததால் அவரது மனைவி சம்யுக்தா தேடத் தொடங்கினார்.

    உறவினர்கள் அருள்குமாரை தேடி பண்ணைக்குட்டைக்கு சென்றனர். அங்கு நீரில் மூழ்கிய நிலையில் அருள்குமார் பிணமாக மிதந்தார்.

    சாவில் மர்மம்

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அருள்குமாரின் உடலை மீட்டனர். அருள்குமார் பண்ணை குட்டை நீரில் மூழ்கி இறந்து இருப்ப தாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அருள்கு மார் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக கூறி அவரது மாமனார் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனது மகளின் கணவரான அருள்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அருள்குமார் குளிக்கச் சென்ற தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த மனுவை தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    • பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைபழைய சுங்கம் அருகே உள்ள அகஸ்டின் பேட்டையை சேர்ந்தவர் மணி (வயது 77).

    சம்பவத்தன்று இவர் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள திருச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மணி மீது ேமாதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த மணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி அருகே உள்ள பாலகணேசபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (57).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி - லிங்கனூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ரங்கராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிய ரங்கராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர்.
    • போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை

    சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் பட்டா கத்தி மற்றும் இரும்பு தடியுடன் ஒவ்வொரு வீடாக பூட்டை உடைத்து உள்ளே வீட்டில் இருப்பவர்களை மிரட்டி அங்கிருந்த விலை மதிப்பு மிக்க செல்போன் மற்றும் அவர்கள் வைத்திருந்த பணங்களை பறித்து சென்றனர்.

    இதேபோன்று சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வருவதற்கு உள்ளாகவே அங்கிருந்த கொள்ளையர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இச்சம்பவத்தில் இரண்டு வட மாநில தொழிலாளர்கள் கத்திflகுத்து காயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம் கருமத்தம்பட்டி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் பற்றிய உருவப் படத்தை வைத்து அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

    • மருந்தகங்களுக்கு திடீர் எச்சரிக்கை
    • கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாட்டுத்துறை) குருபாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவர்கள் டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் விற்க வேண்டும்.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருந்தகங்கள் விற்கக் கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருந்தகங்களில் டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  

    • வேலைக்கு வர தாமதம் ஆனதால் மோதல்
    • கத்தியால் குத்திக்கொலை செய்த மில் சூப்பர்வைசர் மார்ட்டினை கைது செய்தனர்.

    கோவை 

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பா ளையத்தில் தனியார் மில் செயல்பட்டு வரு கிறது. இந்த மில்லில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மில் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.


    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ்கும்பார் (வயது 30). இவரது சகோதரர் சுரேந்தர் கும்பார் (28) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அந்த மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் இரவு பணிக்கு செல்லவில்லை.

    அவர்கள் வர தாமதம் ஆனதால் மில்லில் சூப்பர்வை சராக வேலை பார்க்கும் கண்ணம்பாளையத்தை சேர்ந்த மார்ட்டின் (36) என்பவர் தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புக்கு சென்றார்.

    அங்கு சுபாஷ்கும்பார், சுரேந்தர்கும்பார் ஆகியோர் பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு இருந்தனர். டி.வி.யில் ஒலியை சத்தமாக வைத்து பார்த்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருந்தது.


    இதனை பார்த்த சூப்பர்வைசர் மார்ட்டின் வேலைக்கு வராமல் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டார்.

    மார்ட்டினுக்கும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுபாஷ்கும்பார், சுரேந்தர்கும்பார் ஆகியோர் சேர்ந்து சூப்பர்வைசர் மார்ட்டினை தாக்கினர்.

    அப்போது மார்ட்டின் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சுபாஷ்கும்பார், சுரேந்தர் கும்பார் ஆகியோரின் வயிற்றில் குத்தினார். இதில் 2 பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷ்கும்பார் பரிதாபமாக இறந்தார். சுரேந்தர்கும்பார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மில் சூப்பர்வைசர் மார்ட்டினை கைது செய்தனர்.  

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை
    • கொலை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை பச்சா பாளையத்தில் உள்ள காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபர் இறந்த 2 நாட்கள் இருக்கும் எனவும், அவரை யாரோ கை, கால்களை கட்டி கொலை செய்து அடையாளம் காண முடியாதபடி முகத்தை சிதைத்து வீசி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து செட்டிப்பாளையம் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்றும், அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சுதா காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்( வயது 34) திருமணமாகவில்லை.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவருடன் சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    அப்போ து அவரது அருகே உள்ள மேஜையில் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த டிரைவர் சுந்தரே ஸ்வரன் (42) என்பவர் அவரது நண்பர்களுடன் மது குடி த்துக் கொண்டிருந்தார் .

    அவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

    இதனை சஞ்சய் குமார் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    பின்னர் சஞ்சய் குமார் த னது மோ ட்டா ர் சைக்கி ளில் இடை யர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சுந்தரேஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சய் குமாரின் கழுத்து, முதுகு ,தொடை ஆகிய பகுதிகளில் குத்தினார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சஞ்சய் குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.
    • இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    கோவை

    மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் லால் என்ற சபீர் அகமது (வயது35), வ.உ.சி நகர் சந்தை கடை பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் சுல்தான் (35). கூலி தொழிலாளர்கள்.

    இவர்கள் 2 பேரும் மைதானம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.

    அப்போது அங்கு மது அருந்திய பின் டாஸ்மாக் பாரில் உணவு பதார்த்தங்கள் கேட்டு அங்கு பணியில் இருந்த சிங்கதுரை என்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சிங்கதுரை மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    ×