search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector orders"

    • வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மாவட்டம், பெரியநாயக்க ன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினையும் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆண்டு திட்டத்தின் கீழ் பெரியநாய க்கன்பாளையம் சந்திப்பு வழியாக மேம்பாலம் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பாலம் 1,850 மீ நீளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரம்பித்து எல்.எம்.டபியூ. சந்திப்பு, பெரியநாயக்க ன்பாளையம் சந்திப்பு, வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தினால் 3 சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 84 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    மேலும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.41.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. தேசிய நெடுஞ்சாலை எண் .67 ல் கட்டப்படும் நான்கு வழி மேம்பாலம் ஜான் பாஸ்கோ சர்ச்சில் ஆரம்பித்து ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, கோவை வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது. இந்த பாலத்தினால் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். பாலத்தின் 75 சதவீதம் பணிகள் முடிவுற்று உள்ளன.

    பெரியநாய க்கன்பாளையம் பாலம், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பாலம் ஆகிய பாலங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நம்பர் 4 வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி கற்றல் திறன் குறித்து பார்வையிட்டார்.

    மேலும், வளம் மீட்பு பூங்காவில் வேளாண் சார்ந்த கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் பணியினையும், நாயக்கன்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரப்பு அமைக்கும் பணியும் மற்றும் நாயக்கன் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பெரியநா யக்கன்பாளையம் டவுன் கூட்டுறவு நுகர் பொருள் அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குச்சி பாளையத்தில் கரிசல் மகளிர் அங்கக வேளாண் குழுவினர் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை உரங்களை தானாகவே தயாரித்து வருகின்றனர்.

    இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் விதமாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியிலுள்ள பயிரிட்டுள்ள தென்னை, பாக்கு, வாழை, வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடிகளை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனிருந்தனர்.

    • அணைக்கரைப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • சோலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், ஆசிரிய ர்களின் எண்ணிக்கை, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்ப ட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சோலையூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3. லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் பார்வை யிட்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டி ஓடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும், ஆதிதிராவிடா; நலத்துறையின் சார்பில் ரூ.4.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் அத்தியயூத்து பகுதியில் வலசைத்துறை சாலை முதல் அத்தியூத்து சாலை ஓடையில் ரூ.272.20லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ராஜவாய்கால் கால்வாயில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதனைத்தொடார்ந்து, சோலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வை யிட்டு ஆசிரிய ர்களின் எண்ணிக்கை, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மழைகாலமாக உள்ளதால் பள்ளி வகுப்பறை, மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் ஆசிரியரை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலெட்சுமி, ஞானதிருப்பதி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங் களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
    • ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தேனி:

    மத்திய, மாநில அரசுகள் இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் உதவி இயக்குநரிடம் (ஊராட்சிகள்), புகார் தெரிவிக்கலாம். தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலக்க கொரோனா பதிவு உருவாகி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் இரட்டை இலக்க கொரோனா பதிவு உருவாகி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பழனி கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வராதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கூட்டம் கூட்டமாகவும், முக கவசம் அணியாமலும் அவர்கள் செல்வதால் தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×