search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college admission"

    • சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது.
    • தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது. அன்று முதல் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை வாங்கி விண்ணப்பித்து வந்தனர். தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த மே 6 ஆம் தேதியில் இருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அட்மிஷன் தொடங்கியது.

     

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவித்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்கள் www.tngasa.in - ல் விண்ணப்பிக்கலாம்.

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
    • முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    நிலக்கோட்ைட:

    நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொரு ளாதாரம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவு களுக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடம் இருந்து ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

    கடந்த 8-ந்தேதி முதல் வருகிற 19-ந்தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓ.சி, பி.சி, எம்.பி.சி, மாணவிகளுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 பதிவு கட்டணம் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளி கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாணவி களுக்கான கலந்தாய்வு 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    முதற்கட்ட கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெற உள்ளது. முதலா மாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என கல்லூரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்து ள்ளார்.

    அமெரிக்க கல்வித்துறையில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #MassiveCollege #Cheating #HollywoodStar
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலி சான்றிதழ்கள், பொய்யான மதிப்பெண்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

    இது தொடர்பாக ஹாலிவுட் நடிகைகள் லோரி லவுக்ளின், பெலிசிட்டி ஹாப்மேன் ஆகிய 2 நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×