search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college bus accident"

    • திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்தில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி சார்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் தினமும் மாணவ-மாணவிகள் சென்று வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 கல்லூரி மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமான மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

    திருச்சி,

    திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பஸ்சை நிறுத்த டிரைவர் கண்ணன் போராடினார். ஆனாலும் அந்த பஸ் சாலையில் ஓரத்தில் நின்றிருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் நிற்காமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி நின்றது.

    இந்த விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வேனில் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை காண பள்ளி மற்றும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    செங்கத்தில் கல்லூரி பஸ் மோதி அதே கல்லூரி மாணவி பலியானார். மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    செங்கம்:

    செங்கம் கொட்டாவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் குமுதா (வயது 19). இவர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகே வழக்கம் போல் கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது, மாணவி படிக்கும் அதே கல்லூரி பஸ் அதிவேகமாக வந்து சாலை ஓரம் காத்திருந்த மாணவி மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர், பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்ததும், செங்கம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×