search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College of Agriculture"

    • வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (ஹானஸ்) வேளாண்மை, பி. எஸ்சி (ஹானஸ்) தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 மாதம் 26 குழுக்களாக தங்கி வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சி பெற்றனர். முகாம் நிறைவு விழா கல்லூரி டீன் எம். ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் ஏ. அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். துணை பேராசிரியர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள், கண்காட்சி பற்றி விளக்கி கூறினார்.

    எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி பேசினார். இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை எஸ். ஆனந்தி நன்றி கூறினார்.

    • இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர்.
    • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர். இக்கரைசலானது வேப்பிலை, புங்கம், ஆடாதோடா, எருக்கு, ஊமத்தை ஆகிய இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு நிழலுள்ள பகுதியில் வைத்து சேமிக்கப்படுகிறது.

    இது இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமனா விவசயிகள் காலந்து கொண்டனர்.

    • ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
    • அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி “விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    சேலம்:

    ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் சுபிக்க்ஷா, சுருமி சுபையர், சுஷ்மிதா, சுவாதி, தாமரை தர்ஷணா, வானதி, வினிதா, விஷ்ணுபிரியா, யமுனா தேவி ஆகியோர் "விவசாயத்தில் மகளிரின் முக்கியத்துவம்"குறித்து இருப்பாளி கிராமத்தில் கூட்டம் அமைத்து பெண்க–ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாணவி வினிதா "விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி "விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு" குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மனோகர் மற்றும் இந்துமதி செய்தனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பாரதி உலா பேச்சரங்கம் நடந்தது.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய 9-ம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். இதில் "பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம் நடந்தது.

    திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிச ளித்து சிறப்புரையாற்றி னார். கல்லூரி இயக்குனர் கோபால், உரத்த சிந்தனை சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் சிறப்புரை வழங்கினர்.

    விழாவில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன. மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.


    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் சேது குமணன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    இதில் சென்னை காவல்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) பேசுகையில், தமிழ்நாட்டின் இரு முக்கிய நிர்வாக பதவிகளான காவல்துறை தலைவர் மற்றும் தலைமை செயலாளர் பதவிகளை வகித்துவரும் இருவருமே விவசாய கல்வி கற்றவர்கள் தான். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது.இந்த உலகம் திறமை வாய்ந்தவர்களுக்காக காத்திருக்கிறது. இந்த கல்லூரி எதிர்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளர வாழ்த்துகிறேன் என்றார்.

    உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை செயலாளர் கவிதாஞ்சலி நன்றி கூறினார்.

    • மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர்.
    • தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர்.

    வல்லம்:

    தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு நான்கு ஆண்டு வேளாண்மை படிப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர் அதில் 450 மாணவ- மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் உணவகத்தின் உள்ளே சென்று பார்த்த போது பழைய மீதமான உணவுகள், கெட்டு போன உணவுகள் ப்ரீஸர் பாக்ஸில் நாள் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்று முன் தினம் இரவு மாணவர்கள் கல்லூரி விடுதியில் சாப்பிடாமல் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை கல்லூரி நுழைவாயில் முன்பே 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர். இதில் முதலாம் ஆண்டு மாணவி பசி மயக்கத்தில் மயக்கம் அடைந்தார்.உடனே சக மாணவிகள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பூதலூரா வட்டாசியர் பிரேமா, தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா. மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கல்லூரிக்கு, இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கல்லூரி விடுதி மற்றும் கேணாடினில் தரமற்ற கெட்டு போன உணவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உணவு பாதுகாப்புஅதிகா ரிகள் கெட்டுபோன உணவுகளை சோதனை க்காக கொண்டு சென்று ள்ளனர்.

    அதே போல் உரிய தர சான்றிதழ் இன்றி மாணழர்களுக்கு‌ உணவு தயாரித்து தந்து வந்ததும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் உள்ள மெஸ் மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதனையடுத்து மாணவ- மாணவிகளுடன் அதிகா ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவ- மாணவிகள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்கு வெளியில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

    ×