என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "colleges holiday"

    • புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக கனமழையும்.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
    • பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.

    இதேபோல் ஆற்றுவாய்க்கால் கரையோரம் உள்ள கூட்டுறவு பால் சங்க அலுவலக கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊழியர்கள் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பால் கேன்களை சுமந்து சென்றனர். இதேபோல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது.

    பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பந்தலூர் பஜாரில் உள்ள சாலை, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் சாலை, தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறுகிறது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    • புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கிறது.
    • கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று அல்லது நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    இதேபோல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கிறது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
    • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், புதுச்சேரிக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனையடுத்து புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • இன்று, நாளையும் 2 நாட்கள் மலைரெயில் ரத்து.

    ஊட்டி:

    வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல், தமிழகத்தை நெருங்கி வந்து, புதுச்சேரியில் கரையை கடந்தது.

    புயல் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று மாலை ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய, கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு, ஊட்டியில் ரெயில்வே போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது.

    இதேபோல் ஊட்டி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள ரெயில்வே பாதையிலும் மழைநீர் அதிகமாக தேங்கியது. பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தார்கள்.

    ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் காலையில் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடியும், ஜர்க்கின் அணிந்தபடியும் பயணித்தனர்.

    ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதுமே பலத்த மழை பெய்தது. காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    மழையுடன் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களையும் கண்டு ரசித்தனர்.

    நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் மற்றும் கொடநாடு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கூடலூர் பஜார்-73, கொடநாடு-71, கிளைன்மார்கன்-59, அப்பர் கூடலூர்-52, ஊட்டி-40, தேவாலா-39, பார்வுட்-35, கீழ்கோத்தகிரி-33, கேத்தி-32, செருமுள்ளி, வுட் பெரியார் எஸ்டேட்-30, கோத்தகிரி-27.

    இதற்கிடையே நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இன்று, நாளையும் என 2 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.
    • விடுமுறை விடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

    தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

    தென்தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    தீ வேகமாக பரவி வருவதால் மலை அடிவாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

    தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும், காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கஜா புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    ×