search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coma"

    • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
    • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளுர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகள் ஜெயந்தி. இவருக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயந்தியை பிரசவத்துக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சேர்த்தனர். அங்கு ஜெயந்தியை டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் குழந்தை அசைவற்று இருப்பதாக கூறினர்.

    ஆனால் வயிற்றில் அசைவு தெரிவதாக உறவினர்கள் கூறியதன்பேரில் டாக்டா்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜெயந்திக்கு உடல்நலம் மோசமான நிலை ஏற்பட்டதால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஜெயந்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். அங்கு 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இங்கு அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 13 மாதம் ஆகியும் கோமா நிலையிலேயே அவர் உள்ளதால் ஜெயந்தியின் உறவினர்கள், பெற்றோர்கள் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆரணி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சம்பவத்தன்று இருந்த டாக்டர்கள், நர்சுகள் மயக்கவியல் டாக்டர் உள்ளிட்டவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பான அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கு தெரிவித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் கூறினார்.

    இதுகுறித்துதகவல் அறிந்தவுடன் ஜெயந்தியின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    • தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
    • இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

    சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

    பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

     


    கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.

    • தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.

    அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    • சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
    • உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

    அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

    அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #US #ComaPatient
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி ‘கோமா’வில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அருகில் இருந்த நர்சு கவனித்தார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.

    உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. இச்சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதுகுறித்து அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #US #ComaPatient
    ஆபரேஷன் தாமரை தோல்வியால் கர்நாடக பா.ஜனதா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தனது டுவிட்டரில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாமல் பா.ஜனதா தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடகத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே மோதல் உருவாகி ஆட்சி கலைந்து விடும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-



    “பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கலைந்து விடும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பல முறை ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா போட்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்தது. இதனால் கர்நாடக பா.ஜனதா கோமா நிலைக்கு சென்றுவிட்டது. எனவே மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா நினைக்க வேண்டாம்.

    ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு சிறந்த எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுவது நல்லது. ஜனநாயகத்தில் இதுவே சிறந்ததாகும்.“ இவ்வாறு பா.ஜனதா மற்றும் எடியூரப்பாவை தாக்கி சித்தராமையா கருத்து பதிவிட்டுள்ளார். #Siddaramaiah
    ×