என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "community hall"
- போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.
- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறை கிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை ஊராட்சியில் அமைந்துள்ள சிறப்பாறை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமு தாயக்கூடம் கட்டப்பட்டது. போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் சமுதாய கூடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி போனது.
மேலும் சமுதாயக்கூடத்தை சுற்றிலும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படு கிறது. சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறப்பாறை கிராம பொது மக்கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி யுள்ளனர்.
ஆனாலும் தற்போது வரை சமுதாய க்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சமுதாயக்கூடத்தை சிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சமுதாயக்கூடம் இல்லாத காரணத்தால் கிராம பொதுமக்கள் அவர்களது வீட்டு விஷேசங்களுக்கு வேறு கிராமங்களில் உள்ள தனியார் மண்டபங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறப்பாறைகிராமத்தில் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர் கிராமத்தில் புதிய சமுதாய கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இப்பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பாகமாக ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும், ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் சொந்த நிதியில் இருந்து வழங்கி உள்ளனர். வாராப்பூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் இப்பகுதி வளர்ச்சிக் காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக நியாயவிலைக்கடை, ஆவின் பாலகம், குறுங்காடுகள் திட்டம், இயற்கை முறையில் உரம் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டுதல், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டினை இப்பகுதி கிராம மக்களுக்காக அரசு வழங்கும் உதவியோடு தன் சொந்த நிதியில் இருந்தும் வழங்கி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் எடுத்த பெரும் முயற்சியாக இக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி மதிப்பீட்டில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நடுநிலை பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டது. இப்படி பதவியேற்ற 3 ஆண்டுகளில் அரசு வழங்கும் முத்தான பல திட்டங்களை தனது கிராம முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தி வரும் ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்களும் ஊர் முக்கி யஸ்தர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி, வி.என். ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
- ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது
ஊத்துக்குளி, ஜூலை.19-
ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.
மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.
- மூன்றில் ஒரு பங்கு தொகை ரூ.27 லட்சத்தை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்
- அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் எர்த்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 81 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது.
இதற்காக மூன்றில் ஒரு பங்கு தொைகயை எர்த்தாங்கல் கிராம பொதுமக்கள் வழங்கு முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயனிடம் ரூ.27 லட்சத்திற்கான காசோலையை எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒன்றியக்குழு துணை தலைவருமான கே.கே.வி. அருண்முரளி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் வழங்கினர்.
- ரூ. 22 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
- பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15லட்சம், பொது நிதியில் இருந்து ரூ.7லட்சம் என மொத்தம் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூட கட்டித்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து குமரப்பட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியையும் பெரியபுள்ளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கரு.முருகேசன் வரவேற்றார். கொட்டாம் பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன் தலைமை தாங்கினார்.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ராஜேந்திரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் துணை சேர்மன் குலோத்துங்கன், பள்ளப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வள்ளி மயில் முருகேசன், துணைத்தலைவர் நாகஜோதி, கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர் சேதுராமன், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் பொதியாடி, பள்ளபட்டி கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சமுதாய கூடம் கட்டித்தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊரின் மையபகுதியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட. நரிமேடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
முல்லையாறு பிரிவு பாசன கால்வாய் கரை யோரம் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செல்ல போதிய அகலமான சாலை இல்லாத நிலையில் இது வரை பஸ் வசதிகள் இன்றி மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெளியூர் பயணத் தேவை களுக்கு மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாக னங்களை கிராம மக்கள் பயன்படுத்தி வரும்நிலை உள்ளது.
கிராமத்தினர் காதணி விழா மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை நடந்த அங்கு மண்டபங்கள் இல்லை. இதனால் கிராம மக்கள் வாடிப்பட்டி அல்லது சோழ வந்தான் நகர் பகுதிக்கு சென்று மண்டபங்களை வாடகைக்கு பிடித்து விசேஷங்களை நடத்தும் நிலை உள்ளது. இதனால் கால விரயமும் செலவும் ஏற்படுகின்றது. இதுகுறித்து நரிமேடு கிராம மக்கள் கூறுகையில், இங்கிருந்து வெளியூர் செல்ல மினிபஸ் வசதி கூட இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரமுள்ள நாச்சிகுளம் அல்லது வாடிப்பட்டிக்கு நடத்து சென்றுதான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றோம்.
இந்த நிலையில் வீடுகளில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்காக உறவினர்கள் அழைத்து வெளியூர்களூக்கு சென்று தனியார் மண்டபத்தில் அதிக வாடகை பணம் கொடுத்து விசேஷங்களை நடத்தி வருகின்றோம்.
ஊரின் மையபகு தியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்திற்கான பூமிபூஜை நடந்தது.
- அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் இந்தப்பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த னர்.அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாத புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது.
இதில் கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அஹமது, மாணவர் அணி நகர் அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்ப சிவம், நகர் மன்ற கவுன் சிலர்கள் முகமது ஹாஜா சுகைபு, நசுருதீன், மீரான் அலி, பயாஸ், காயத்ரி உள்பட கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயகூட கட்டுமான பணிகளை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது.
மேலூர்
மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்காடு சிவன் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மாவட்ட வேளாண் விற்பனை குழுதலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணைத்தலைவர் குலோத்துங்கன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலவளவு விஜயராகவன், கிடாரிபட்டி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
- நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர்-3-ல் செயல்பட்டு வரும் பெரியபாளையத்தம்மன் அரசு தொடக்கப்பள்ளியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
அதையொட்டி, தற்காலிகமாக அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் பள்ளி செயல்படுவதற்காக கல்வித்துறை மற்றும் நகராட்சி ஒத்துழைப்புடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அனைத்து நடவடிக்கைகளையும் விடா முயற்சியுடன் மேற்கொண்டார்.
சமுதாய கூடத்தில் மாற்றி அமைக்கப்பட்ட தற்காலிக பள்ளியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்வி துறை (பெண்கள்) துணை இயக்குனர் நடனசபாபதி, குமார் (வட்டம்-2), தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன் , மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மீனவர் அணி விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல், கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் செல்வம்பால் நன்றி கூறினார்.
- மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
- கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டு பாளையம் ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் காலனியில் புதிதாக ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கணேஷ் குமார் , வார்டு உறுப்பினர்கள் தவமணி சக்திகதிரவன் , தங்கமணி கோவிந்தசாமி,உமா மகேஸ்வரி சுரேஷ், பாலமுருகன், கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்