என் மலர்
நீங்கள் தேடியது "Competitive Exam"
- CGPSC-2023 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது
- ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஒரு பியூன் கடினமான சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (CGPSC) தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
கடந்த ஏழு மாதங்களாக தலைநகர் ராய்பூரில் உள்ள CGPSC அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் 29 வயதான பட்டியலின விவசாய குடும்பத்தை இளைஞர் சைலேந்திர குமார் பந்தே, தனது ஐந்தாவது முயற்சியில் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது மாநில வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட CGPSC-2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பொதுப் பிரிவில் 73 வது ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவில் 2 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
ராய்ப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர குமார், அங்குள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.
ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, பந்தே தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்லாமல் ஒரு அரசாங்க ஊழியராக ஆசைப்பட்டதால் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் குடும்பத்தை சூழலை கடந்த காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வந்துள்ளார்.
- மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதுதித்து தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி பல மாணவர்கள் பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
அப்போது பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் சந்திரசேகர் சிங் ஒரு மாணவரை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை போலீஸ் அந்த இடத்திலிருந்து விரட்டியடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
- ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] கடந்த டிசம்பர் 13 [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
பல தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் கொடுப்பதில் தாமதம் குறித்து குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது. தேர்வர்கள் வினாத்தாள்களை கிழித்து, தேர்வு அறையில் இருந்து அமளியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகியது.
இந்நிலையில் முதன்மை தேர்வுகளை மீண்டும் நடத்தக்கோரி திரளான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் வியூக வகுப்பாளார் பிரசாத் கிஷோர் நடத்தும் ஜன் சுராஜ் கட்சியினருக்கும், போட்டித் தேர்வு பயிற்சி மையாதோரும் மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திற்குச் செல்வதற்காக மாணவர்கள் காந்தி மைதானத்தில் திரண்டு ஜே.பி. கோலம்பர் நோக்கி நோக்கி பேரணி நடத்தினர் பிரசாந்த் கிஷோர் மாணவர்களுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்.

இதனால் பிரசாந்த் கிஷோர், அவரது ஜன் சூராஜ் கட்சியின் தலைவர்கள், சில பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் 700 போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் மக்களைக் கூட்டி, அவர்களைத் தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜன் சூராஜ் கட்சி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், பாட்னாவின் காந்தி மைதானம் அருகே கூட்டத்தை வழிநடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது வன்முறையாக மாறியது என்றும் காவல்துறை ஒலிபெருக்கிகளை உடைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மோதினர் என்றும் கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அதை மீறி பொது ஒழுங்கை சீர்குலைத்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 1261 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
- திருப்பூர் மாவட்டத்தி 17,780 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுப்பள்ளியில் பயிலும் 1261 மாணவ, மாணவிகளுக்கு ரூ.63,77,474 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது :- திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 17,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் போது மிகுந்த வலிமையுடன் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தவறான முடிவுகளுக்கு செல்லக்கூடாது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியும் வளர்த்துக் கொண்டு போட்டித்தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.