என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "conduct"
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
- இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
- இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் "நில்' என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், "கரபுரநாதர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இந்த கோவில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோவிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.
குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோவிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்டஇந்த கோவிலில் திருப்பணி நடத்தி குமாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 9 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து,சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை இணை கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
திருப்பணியின்போது ராஜகோபுத்தில் உள்ள சிலைகளை மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். சன்னதி விமானம் மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். திருப்பணி 80 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பணி மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்தவேண்டும் என்று செவிலியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் இந்திரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் கனகலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை எம்.ஆர்.பி. மூலம் காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதற்கட்ட பதவி உயர்வான காலியாக உள்ள பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.
சமுதாய நல செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மாநில அரசின் முக்கிய திட்டமான எம்.ஆர்.எம்.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சில்லரை செலவின தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இதை வழங்கிட வேண்டும். துணை சுகாதார மைய குடியிருப்பு கட்டிடங்கள் பல ஆண்டுகளாக செயலிழந்து விட்டது. ஆனால் ஊதியத்தில் மாதம் ரூ. 7 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர சுகாதார மையங்களில் தொகுப்பூதியத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர்களை காலமுறை ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய உயர்மட்டக்குழு விவாதித்து வருவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும்.
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்