என் மலர்
நீங்கள் தேடியது "Confinement"
- ராஜஸ்தானை சேர்ந்த வர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் ஆசாரி தெரு வில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதையத்து அவர்கள், தர்மிசந்தை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
ராஜஸ்தானை சேர்ந்த வர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் ஆசாரி தெரு வில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், தர்மிசந்தை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதையத்து அவர்கள், தர்மிசந்தை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த தர்மிசந்த் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சில வியாபாரிகள், தாக்குதல் நடத்திய ஒருவரை பிடித்து சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அஸ்தம்பட்டி பிள்ளையார் கோவில் ரோடு பகுதியை சேர்ந்த முகமது உக்சா (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முகமது உக்சாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நாமக்கல் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
- இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
நாமக்கல்:
ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் கிச்சன் வேர் என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு குமாரபாளையம் கலைவாணி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (26) என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமானார். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாத நிலையில் பேஸ்புக்கில் பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி கோபிநாத் தனது வாடிக்கையாளரை சந்திக்க குமாரபாளையத்திற்கு சென்றார்.இதனை அறிந்த யோகேஸ்வரன், கோபிநாத்தை நேரில் சந்தித்து பேச வேண்டும் என தெரிவித்தார். மேலும் பைபாஸ் ரோட்டில் அருவங்காடு பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவரை சந்திக்க கோபிநாத் அருவங்காட்டுக்கு சென்றார். அங்கிருந்த யோகேஸ்வரன், அவரை அங்குள்ள மலைக்கரடு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு குமாரபாளையம் ஸ்ரீரங்க செட்டியார் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (27), பண்டாரி கோவில் வீதியை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோர் வந்தனர். 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், பாக்கெட்டில் வைத்திருந்த 18,000 பணம், வெள்ளி கொடி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர்.
இது குறித்து கோபிநாத், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார் . இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்த யோகேஸ்வரன், மணிகண்டன் , வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் .பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது இதேபோல மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார்.
- இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவரது மனைவி வளர்மதி (வயது 54). இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி பகல் நேரத்தில் அந்தப் பகுதியில் வளர்மதி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது அவர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிக் கொடியை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இது பற்றி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், மாணிக்கம் மற்றும் போலீசார் கார்த்திகேயன், புஷ்பராஜன், மோகன் குமார், பாலமுருகன், அருள்குமார், மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 95-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சுமார் 75 கி. மீ. தூரம் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) என்ற வாலிபரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையொட்டி ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிட மிருந்து திருடப்பட்ட நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர் . போலீசார், கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியில் நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
- அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 60) விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
அப்போது நல்லதம்பி அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.
மேலும் நல்லதம்பியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து நல்லதம்பி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நல்ல தம்பியை தாக்கிய நாமக்கல் தாலுகா, கோதூர், அண்ணா நகரை சேர்ந்த துரைசாமி மகன் விக்னேஷ் (24), பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள செருக்கலைபுதுப்பாளை யத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மணி கண்டன்(23), அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் பிரபாகரன் (22) ஆகிய 3 பேர்களையும் வேலக வுண்டம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி 3 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). சேகோ பேக்டரி உரிமையாளர்.
இவர் நேற்று செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற பக்ருதீன் ( 45), அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியில் விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைத்தனர்.
- இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே வெய்யகாஞ்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி( வயது 55). விவசாயி. இவர்கள் தோட்டம் அருகாமையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராசு(43)என்பவருக்கும் தடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று பெரியசாமி அவரது தோட்டத்திற்கு சென்றபோது, ராசு அவரை தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராசு, அங்கு கிடந்த கற்களை எடுத்து பெரியசாமி மீது எறிந்து தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பெரியசாமி பலத்த காயம் அடைந்தார்.
அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பெரியசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுவை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது.
- அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் சிவக்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கலில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.
- வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் அருகே பொன்மலர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சிவகுருநாதன் (வயது 40). இவரது மனைவி பவ்யா (36). அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதனின் அண்ணன் வஜ்ரவேல் (44).
இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வஜ்ரவேல் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பொன்மலர்பா ளையத்திற்கு வந்துள்ளார்.
நேற்று அவரது தம்பி சிவகுருநாதனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பவ்யா மட்டும் இருந்துள்ளார். அங்கு வந்த வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பவ்யா பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து வஜ்ர வேலை கைது செய்து விசா ரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
- போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து குற்றவாளிகளை பிடிக்க ராசிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று தனிப்படை போலீசார் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசா ரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரி டம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் சேலம் அருகே உள்ள தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கந்தசாமி (வயது 40) என்பதும், ராசிபுரம் வாரச்சந்தையில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதை யொட்டி போலீசார் கந்தசா மியை கைது செய்து அவரி டம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கந்தசா மியை போலீசார் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார்.
- அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40), கூலித்தொழி லாளி. இவர் 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாண வியை பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கேலி கிண்டல் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். வழியில் அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, நடந்த சம்பவங் களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து பள்ளி மாணவி யின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவிக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான ரவிக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்த பப்ட்டு சேலம் சிரையில் அடைக்கபப்ட்டார்.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26 ). இவர் ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி பகுதியில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது.
புகாரின் பேரில் மணி கண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த மணிகண்டன் இரவு நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுவிட்டு சிறுமியின் அக்கா 19 வயது பெண்ணை கூட்டி சென்றார்.
இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு அடைகலம் கொடுத்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது மணிகண்டன் நெசவு தொழிலில் செய்து வருவ தும், அவருடன் சென்ற சிறுமியின் அக்காள் அதே பகுதியில் தனியார் கம்பெ னிக்கு வேலைக்கு செல்வ தும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது.
இருவரையும் அழைத்து வந்த போலீசார் மணி கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்ப வம் நடைபெற்று 11 மாதங்க ளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.