search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress executives"

    • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

    பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

    அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

    நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

    ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
    • நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    மூலக்கரைப்பட்டி:

    நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை கேட்பதற்காக நாங்கள் 50 பேர் வாகனத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தோம். நாங்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பின் பேரில் செல்லவில்லை, அங்கு அவரை சந்தித்து பேசவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவரை சந்தித்து பேச நேரம் கேட்டோம். 4 மணி நேரம் காக்க வைத்து விட்டு மாநிலத் தலைவர் சந்திக்காமலேயே புறப்பட்டு சென்றார்.

    அப்போது அங்கு இருந்த அவருடைய ஆதரவாளர்கள் எங்களை அரிவாள், கம்பு மூலம் தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எங்கு போவது என்று சிதறி ஓடினோம். அவர்களது செயல் வேலியே பயிரை மேயும் நிலை அங்கு ஏற்பட்டது. நாங்கள் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறோம். தற்போது மாநில தலைவருடைய செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். உடனடியாக கட்சி தலைமை மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

    அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், சுப்பிர மணியன், வேல்முருகன், மாரிமுத்து, மயில் ராஜா, வின்சன், சுப்பிரமணி, ஆதவ், தாமோதரன், ஊசி காட்டான், வன்னி நாச்சி யார், மாடசாமி செட்டியார், ருக்மணி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை நவீன் வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் துறையின் மாநில தலைவர் டி.ஏ.நவீன் பரிந்துரையின் பேரில் அகில இந்திய தலைவர் தமர்வாஜ்சாகு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் பட்டியலை நவீன் வெளியிட்டுள்ளார்.

    துணை தலைவர்களாக எஸ்.ஜெயச்சந்திரன், டி.காமராஜ், ஜோஷ்வா சுரேஷ், ஏ,தனராஜ், ஆவடி விஸ்வநாதன், ஏ.மஸ்தான், கே.பரந்தாமன், ஐஸ்அவுஸ் தியாகு, நாஞசில். எம்.சதீஷ், ஆர்.குணசேகரன், எஸ்.தீனா, ஜி.அனிதா ஸ்வீட்டி, இ.ஆர். ரவிச்சந்திரன், கே.ஏ.எம்.ரகுராமராஜ், பி.வி.செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுச் செயலாளர்களாக ஏ.திலகராஜன், பி.பிரகாசம், மில்டன் தன்ராஜ், எஸ்.எஸ்.கணேஷ், பி.‌ஷபீர்அகமது, பி.பி.எம். ஜஸ்கர்ராஜா, ஒய்.பெரோஸ், பி.எம்.கே.செந்தில்குமார், ஜி.ஜான்கென்னடி, எம்.ஜி.எத்திசன் அரசன், லெவிடைட்டஸ், புரசை கீதா, விஜயேந்திரன், எஸ்.ராஜ்கண்ணு, முத்துகிருஷ்ணன், சாமுவேல், சந்தோஷ், ராஜா முகம்மது, மகேந்திரபாபு, சரவணன், எம்.கந்தசாமி, பட்டு எல்.கிரிபாபு, பி.ராஜ்குமார், ரமேஷ் கிருஷ்ணா, எம்.குணாளன், விருகை ஏ.ஜே.சந்திரன், ஆண்ட்ரூ அலெக்ஸ் ஆகியோரும் பொருளாளராக ரஹமத் அலிகானும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    செயலாளர்களாக சக்கரை பாண்டியன், எஸ்.முருகேசன், விவேக் வெள்ளையா, அப்துல் மஜித் உள்பட 78 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட தலைவர்களாக ஏழுமலை (வடசென்னை), பி.எஸ்.ராமு (சென்னை கிழக்கு), சிவகுமார் (தென்சென்னை) ஸ்ரீதர் (திருவள்ளூர் வடக்கு), வரதராஜன் (திருவள்ளூர் மத்தி), ராஜேஷ் பாபு (காஞ்சி வடக்கு) தணிகாசலம் (காஞ்சி மேற்கு) உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    ×