search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress protest"

    • பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
    • கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கட்சி மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு பேரணி யாக சென்ற இளைஞர் காங்கிரசார், அங்கு அவரது உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில், முதல்-மந்திரி பினராயி விஜயன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன.

    • ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது
    • இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்

    கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது.

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுபவரால் இது நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போதைய நிர்வகிப்பாளர் ப்ரஃபுல் கோடா பட்டேல்.

    பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அங்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பெல்ட், டை, ஷூ மற்றும் சாக்ஸ் உள்ளிடக்கிய பள்ளி சீருடைகளின் புதிய வடிவம் ஒன்றை கட்டாயமாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    "பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அணிவதால் அவர்களிடையே ஒரு உறுதித்தன்மை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்க உணர்வும் வளரும். பரிந்துரைக்கப்பட்ட சீருடை வடிவங்களை தவிர வேறு உடைகளை அணிவது பள்ளி மாணவர்களை பாதிக்கும். இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது."

    "ஒவ்வொரு மாணவ மாணவியரும் குறிப்பிட்டுள்ள சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். இந்த சீருடை முறையை தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவ மாணவியர் கண்டிப்பாக கடைபிடிப்பதை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவின்படி, 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செக் டிசைனில் அரை பேண்ட் மற்றும் வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும், அவ்வகுப்பு வரை உள்ள மாணவியர் செக் டிசைனில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதே போல் 6-இல் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கடல் நீல நிறத்தில் முழு பேண்டும், வான் நீல நிற அரைக்கை சட்டையும், மாணவியர்கள் கடல் நீல நிறத்தில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    "இது லட்சத்தீவில் வசித்து வருபவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது" என்று லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹம்துல்லா சயீத் குற்றம் சாட்டினார்.

    இந்த புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக மாணவ-மாணவியர்களின் துணையுடன் வகுப்பு புறக்கணிப்பு உட்பட கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பள்ளி சீருடையின் காரணமாக ஒரு போராட்டம் வெடித்ததும், அச்சிக்கல் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை தாங்கினார்.

    வட்டாரத் தலைவர் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    மேலும் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சின்னசாமி, ஆனிமுத்து, ஜார்ஜ், சவேரியார், பிரபாவதி, பால்பாண்டி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி ரெயில்வே நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்று அதே பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

    மதுரை:

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர்.
    • பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள்.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதால் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டனர். இதற்கிடையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நேற்று இரவே காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் போலீசாரிடம் போராட்டத்தில் பங்கேற்க மட்டும் அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி சென்னையில் உள்ள 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் வீட்டுக்காவலில் இருந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி பிற்பகல் 2.40 மணிக்கு வருவதால் போராட்டத்தை மதியம் 1 மணிக்கு நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். பகல் 12 மணிக்கு மேல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக போராட்ட களத்திற்கு வரத் தொடங்கினார்கள். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லப பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் ஆருண், துரை சந்திரசேகர், கே.வி.தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, ரஞ்சித் குமார், விஜயசேகர், ரவிராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ் ராஜசேகரன், முத்தழகன், டெல்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர். பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    முதலில் கே.எஸ்.அழகிரி மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். தொண்டர்கள் அவற்றை பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

    கருப்பு கொடி போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றி இரும்பு தடுப்புவேலி அமைத்து அதற்குள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். போராட்ட களத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பஸ்சும், வேன்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன், து.வெ.வேணு கோபால் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.

    புதுச்சேரி

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்கால் தனியார் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரசுக்கு வழங்க வேண்டிய உரிமை பங்கு தொகையை உயர்த்தி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை, சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    இளைஞர் காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா கண்டன உரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் மோகனவேல், திருமுருகன், செயலாளர் தங்கவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, ரமேஷ், செயலாளர் அருள், முரளி, சேகர், துரைராஜன், வக்கீல் மருதுபாண்டியன், காரைக்கால் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஆறுமுகம், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் திராவிட மணி, காதர் மொய்தின்

    மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சமீர் கோவலன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் சபிக், விக்னேஷ் கிழக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ராம்குமார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், ஸ்டாலின் தொகுதி தலைவர்கள் சந்தோஷ், பிரவீன், நாசர், சுரேஷ், முகமது சபீக், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அத்துமீறி துறைமுக வளாகத்திற்குள் புக முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

    • ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    வந்தவாசி அடுத்த தெள்ளாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் தலைமை தாங்கி னார்.மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் விநாயகமூர்த்தி, மாநில செயலாளர்கள் ஜெயபிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் பிரேமா, கல்பனா இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர்கள் உத்த மன் (ராணிப்பேட்டை), பியாரேஜான் (ஆற்காடு), மாவட்ட நிர்வாகி பிஞ்சி மோகன், வாலாஜா ஒன்றிய தலைவர் வி.சி.மோட்டூர் கணேசன் உட்பட காங்கிரஸ் நிரவாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    மேலூர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் பஸ் நிலையம் முன்புள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம கமிட்டி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் துரைபாண்டி, பொன்.கார்த்திக், வட்டார தலைவர் வைரவன், மணியன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, தனியாமங்கலம் மாதவன், சண்முக வேல், பஞ்சவர்ணம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதே போல் சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    குஜராத் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதிய பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் வக்கீல் மருதுபாண்டி, தனுசு, வேல்முருகன், பஞ்சகாந்தி, சாந்தி, செல்வநாதன், சிலம்பு, கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.

    பஸ்நிலைய நுழைவு வாயிலில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னதாக நேற்று நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமையில் காங்கிரசார் காந்தி சிலைக்கு கீழ் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

    தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதேபோல காங்கிரசார் புதுவை, காரைக்காலில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி

    மத்திய அரசை கண்டித்து காரைக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் மாங்குடி

    எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். நகர தலைவர் பாண்டி, கவுன்சிலர் ரத்தினம், வட்டார தலைவர்கள் செல்வம், கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், கண்டனூர் நகர தலைவர் குமார், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன், சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், நிர்வாகிகள் நெல்லியான், அப்பாவு, பழ காந்தி, மணச்சை பழனியப்பன், கருப்பையா, தட்சிணாமூர்த்தி, புதுவயல் முகமது மீரா, அருணா, பாலா, மாஸ்மணி, மகளிரணி சூர்யா, நாச்சம்மை, வசந்தாதர்மராஜ், மாரியாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    இதேபோன்று தேவகோட்டை ஸ்டேட் வங்கி முன்பு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், இலக்கிய அணி சாமிநாதன், வடக்கு வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×