என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Consumables"
- நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
- சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.
கடலூர்,:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் சூரசம்கார தெரு, குழந்தை காலனி மற்றும் கால்வாய் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொதுமக்கள் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர்சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும், நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம்.
சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார். இவ்வாய்வில் துணை இயக்குனர் (பொறுப்பு) (சுகாதாரம்) கீதாராணி, மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
- நுகர்பொருள் கிட்டங்கியில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
- இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியை அய்யப்பன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கண்காணிப்பாளரிடம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும், எந்தெந்த பகுதிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது? எனவும், கிட்டங்கியில் உள்ள அரிசி, சீனி, பாமாயில் மற்றும் ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அ.தி.மு.க. நகர செயலாளர் பூமா ராஜா, பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.
- வாகனத்தில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வட்ட வழங்கல் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.
இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் ரேசன் அரிசியை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேசன் அரிசி கடத்திய புகாரின் பேரில் விஜயனை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்