என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coonnor"
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள கட்டபெட்டு சரகம் கூக்கல்தொரை அருகே உள்ள கம்பட்டிகம்பை சாலையோரத்தில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கட்டபெட்டு சரக வனச்சரகர் செல்வக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரத்தினை வெட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குஞ்சப்பனை, கூக்கல் தொரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ், சவந்திரபாண்டியன், செல்வன், சிவக்குமார்மற்றும் ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 2.20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ஊட்டி,
ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை கமாண்டா் பிரிகேடியா் எஸ்.கே.யாதவ் தொடங்கி வைத்தாா்.இதில் ராணுவ வீரா்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தேசிய மாணவா் படை உள்பட பலர் கலந்து கொண்டனா். இதைத் தொடர்ந்து ராணுவ மையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சாலைகள் மற்றும் ஓடைகளை மாணவ-மாணவிகள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இங்கு ஒருவார காலத்துக்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும், அதன்பிறகு இந்த பகுதியில் சுமாா் 700 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
- 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
குன்னூர்
குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தின விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் குன்னூர் சார் ஆட்சியர் தீபனாவிஸ்வேஷ்வரி கலந்து கொண்டு முதியோர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு என்ன தேவை என்று அவைகளை பூர்த்தி செய்து தருவதாக பேசினார். 80 வயதிற்கு மேற்பட்ட 10- முதியோர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
- உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
- குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
- இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஊராட்சி பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வண்ணங்கள் பூசும் பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு தராமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கண்டித்து திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது தொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
- வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது
ஊட்டி
குன்னூர் நகரின் முக்கிய வீதிகளாக மவுண்ட்ரோடு, வி.பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளன.
இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
அவ்வாறு சுற்றி திரியும் கால்நடைகள் சாலைகளில் செல்லும் வாகனங்களையும் மறித்து விடுகிறது. சில நேரங்களில் குறுக்கே வந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதேபோல் குன்னூர் மார்கெட் பகுதி, குன்னூர் கேஷ்பஜார், சாமண்ணா பூங்கா, வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட பகுதிகளிலும் மாடுகள் உலா வருகிறது.
மார்க்கெட் பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகள், அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சேதப்படுத்தி வருகிறது.
அத்துடன் அங்கு நிறுத்த படும் வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது சில சமயங்களில், நகரின் மையப்பகுதியான பஸ் ஸ்டாண்டில் கூட கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகள் மற்றும் குன்னூர் மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன.
- பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது.
ஊட்டி,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.
இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடந்த 1952-ம் ஆ
ண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்தது. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது.
- சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை 3 தினங்கள் மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்றும் நேற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.
மேலும் 75-வது சுதந்திர தின விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குன்னூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா படகு இல்லத்தில் குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது. மாணவிகள் நடனமாடிய படி தேசிய கொடியை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுற்றுசூழல் பாதுகாப்பு, தேசப்பற்று குறித்து மாணவிகளின் எடுத்துரைத்தனர். இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.
- காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
- காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது.
இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது.
காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.
இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர்.
கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.
- குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.
- 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராதா மற்றும் துணை தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினர்.பேருராட்சி எழுத்தர் மேகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.இதில் 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு பேரூராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 6-வது வார்டு மணிமாலா பேசுகையில் நான்சச் எஸ்டேட்டுக்கு சொந்தமான சந்தக்கடை பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்றார். இதேபோல் 18 வது வார்டு ட்ருக் பகுதியில் கடந்த 7 மாத காலமாக பணிகள் நடக்கவில்லை. எனவே எஸ்டேட் பணியாளர்களுக்கு முறையான கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த துணை தலைவர் பேரூராட்சியில் போதிய அளவு நிதி இல்லாதததால் இந்த பணிகள் அனைத்தும் படிபடியாக செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
- பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
- கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
குன்னூர்
குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பாகிஸ்தானுடன் 1999-ம் ஆண்டு நடந்த காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காா்கில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கும், தற்போது உயிரோடு உள்ள ராணுவ வீரா்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வெலிங்டன் ராணுவ மைய நுழைவாயில் முன்பு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சாா்பில் தேசிய மாணவா் படை கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், காா்கில் போரின்போது நமது நாட்டு வீரா்கள் போரிட்டதை தத்ரூபமாக மாணவா்கள் நடித்துக் காட்டினா். இதனை ராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனா். இந்நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி சிந்தியா ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது.
- கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓலேண்டு தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்து கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடியின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந்து உள்ளன என்று வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வனவர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்டனர்.
கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்