என் மலர்
நீங்கள் தேடியது "Cow market"
- பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
- கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.
இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.
இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.
அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.
- திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.
- காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை சந்தை நடந்தது. பெருந்தொழுவு சாலையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வாகனங்கள் இடையூறாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சந்தை நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12 மணிக்கு சந்தை நிறைவு பெறும். சந்தை அருகே இரண்டு ஏக்கர் மைதானத்தில் விரிவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு மைதானம் திறக்கப்பட்டது.
- மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது
- சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றுவரும் கால்நடை சந்தையானது தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையாகும்.
வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர் ,நத்தம், பழனி மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, பொள்ளாச்சி, காங்கேயம், மதுரை, உசிலம்பட்டி, ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தைக்கு வருவார்கள்.
சந்தைக்கு இதர நாட்களில் 800 முதல் ஆயிரம் வரையிலான மாடுகளும் விசேஷ நாட்களில் 1,500 முதல் 2,000 மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
தற்போது கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கேரள வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் மாடுகளை வாங்க முன்வராததால் சந்தைக்கு விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட மாடுகள் விற்பனை இன்றி மீண்டும் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை இன்று களையிழந்து காணப்பட்டது.
எதிர்பார்த்த விற்பனை நடைபெறாததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.